32-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு – 2026, வழிகாட்டி ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி மற்றும் கருத்தரங்கம்!
திருச்சிராப்பள்ளி: செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத் துறை – செப்பர்டு , தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து 32-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு – 2026 நிகழ்விற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி மற்றும் கருத்தரங்கம் விரிவாக்கத்துறையில் நடைபெற்றது.

கல்லூரி மாணவர்கள் வழிகாட்டி ஆசிரியர்களாகப் பங்கேற்று, பள்ளி மாணவர்களின் அறிவியல் சார்ந்த ஆய்வுத் திட்டங்களைத் தயாரிப்பதற்கும், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்கும் தேவையான வழிகாட்டுதலுக்கான பயிற்சி பெற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு செப்பர்டு இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே.ச. தலைமை தாங்கினார் செப்பர்டு முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் தொடக்கவுரையாற்றினார்.

தொடர்ந்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிஷப் ஹீபர் கல்லூரி வேதியியல் துறை உதவிப் பேராசிரியரும், தேசிய அறிவியல் மாநாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முனைவர் லெட்டிசியா, இணைய வழியில் பதிவு செய்வது தொடர்பாக மற்றும் அறிவியல் திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் சமர்ப்பித்தல் தொடர்பான வழிகாட்டுதல்களை பற்றி எடுத்துக் கூறினார்.

மேலும், தாவரவியல் துறையின் உதவிப் பேராசிரியர், மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருச்சிராப்பள்ளி மாவட்ட இணைச் செயலாளர் முனைவர் ஜானி குமார் தாகூர் அறிவியல் ஆய்வு திட்ட அணுகுமுறை செய்முறை செயல்பாடுகளை சுற்றுசூழல் மேம்பாடு எரிசக்தி மேலாண்மை நீர் மேலாண்மை உணவு வேளாண்மை சுகாதாரம் என்பதனை அறிவியல் ஆய்வு மற்றும் செய்முறை திட்டத்திற்கான கருப்பொருள் தலைப்புகள் தொடர்பான சிறப்புரைகளை வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் இளநிலை ஒருங்கிணைப்பாளர் சுதாகர் வந்தவர்களை வரவேற்றார்.

முடிவில் இளநிலை ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் நன்றி கூறினார் நிகழ்ச்சியை இளநிலை ஒருங்கிணைப்பாளர் யசோதை தொகுத்து வழங்கினார்.
இளநிலை ஒருங்கிணைப்பாளர் ரட்சனா மாணாக்கர்களின் விவரங்களை சேகரித்தார்; மற்றும் இளநிலை உதவியாளர் அமலேஸ்வரன் தொழில்நுட்ப உதவிகளை செய்திருந்தார் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை செப்பர்டு இயக்குநர் மற்றும் செப்பர்டு ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியின் மூலம் பள்ளி மாணாக்கர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களிடையே அறிவியல் சிந்தனை, ஆய்வுத் திறன் மற்றும் புதுமையான அறிவியல் அணுகுமுறைகளை வளர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
6 துறையிலிருந்து 46 பேர் கல்லூரி வழிகாட்டி ஆசிரியர்களான கல்லூரி மாணாக்கர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.














