• Home
  • தமிழ்நாடு
  • முதியோருக்கான டிஜிட்டல் & நிதியியல் கல்வித் திட்டம் – 2ஆம் நாள் நிகழ்ச்சி, திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், முதியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், “முதியோருக்கான டிஜிட்டல் & நிதியியல் கல்வித் திட்டம்” 5 நாட்கள் நடைபெற்று வருகிறது.
    இன்று 09.10.2026 காலை திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள “பாவை அறக்கட்டளையின் அன்புச் சோலை வளாகத்தில்”, நிதிச் சுதந்திரம், தொழில்முனைவு மற்றும் நிதி ஒருங்கிணைப்பு (Financial Independence, Entrepreneurship and Consolidation) என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு

முதியோருக்கான டிஜிட்டல் & நிதியியல் கல்வித் திட்டம் – 2ஆம் நாள் நிகழ்ச்சி, திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், முதியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், “முதியோருக்கான டிஜிட்டல் & நிதியியல் கல்வித் திட்டம்” 5 நாட்கள் நடைபெற்று வருகிறது.
இன்று 09.10.2026 காலை திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள “பாவை அறக்கட்டளையின் அன்புச் சோலை வளாகத்தில்”, நிதிச் சுதந்திரம், தொழில்முனைவு மற்றும் நிதி ஒருங்கிணைப்பு (Financial Independence, Entrepreneurship and Consolidation) என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

Email :12

முதியோருக்கான டிஜிட்டல் மற்றும் நிதியியல் கல்வித் திட்டம் – இரண்டாம் நாள் நிகழ்ச்சி!
திருச்சிராப்பள்ளி, அக். 9:
திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், முதியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், “முதியோருக்கான டிஜிட்டல் மற்றும் நிதியியல் கல்வித் திட்டம்” ஐந்து நாட்கள் நடைபெற்று வருகிறது.
இதன் இரண்டாம் நாள் நிகழ்ச்சி, 09.10.2026 இன்று காலை 10.30 மணிக்கு, திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள பாவை அறக்கட்டளையின் அன்புச் சோலை வளாகத்தில் நடைபெற்றது.

நிதிச் சுதந்திரம், தொழில்முனைவு மற்றும் நிதி ஒருங்கிணைப்பு (Financial Independence, Entrepreneurship and Consolidation) என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு,

பொன்மலைப்பட்டி பாவை அறக்கட்டளையின் கண்காணிப்பாளர் திரு. தினேஷ் பாபு வரவேற்புரை வழங்கினார். திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி A. விஜயலட்சுமி தலைமை உரையாற்றினார்.

சிறப்பு வளவாளராகப் பங்கேற்ற திருச்சி ஏற்றுமதி இறக்குமதி கூட்டமைப்பு, திருச்சி வர்த்தக மையம் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சங்கத்தின் நிறுவனர் தலைவரான பொறியாளர் N. கனகசபாபதி,

முதியோருக்கான நிதிச் சுதந்திரம், சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், தொழில்முனைவுத் திறன்களை வளர்த்தல் மற்றும் நிதியைத் திட்டமிட்டு நிர்வகித்தல் குறித்து விளக்கினார்.

முதியோர் தங்களது பொருளாதாரத் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்துகொள்ளவும், சேமிப்பின் முக்கியத்துவத்தை உணரவும், நிதி சார்ந்த முடிவுகளைத் தன்னம்பிக்கையுடன் எடுக்கவும் இத்திட்டம் வழிகாட்டும் வகையில் அமைந்தது.

நிகழ்ச்சியின் நிறைவில், திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலகத்தின் பெண்கள் அதிகாரமளித்தல் மைய பாலின சிறப்பு அலுவலர் திருமதி S. மெஹருன் நிஷா நன்றியுரை வழங்கினார்.

முதியோரின் டிஜிட்டல் அறிவையும் நிதி மேலாண்மைத் திறனையும் மேம்படுத்தும் வகையில், இத்திட்டம் அக்டோபர் 8, 9, 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts