• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி காவிரிக் கவித்தமிழ் முற்றம் ஒருங்கிணைபபில், மகாகவி இதழ் நடத்திய மகாகவி ஹைக்கூ விருது 2016 வழங்கும் விழா, 10-10-2026 அன்று மாலை திருச்சி சுருதி மகாவில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு

திருச்சி காவிரிக் கவித்தமிழ் முற்றம் ஒருங்கிணைபபில், மகாகவி இதழ் நடத்திய மகாகவி ஹைக்கூ விருது 2016 வழங்கும் விழா, 10-10-2026 அன்று மாலை திருச்சி சுருதி மகாவில் சிறப்பாக நடைபெற்றது.

Email :15

திருச்சி காவிரிக் கவித்தமிழ் முற்றம் ஒருங்கிணைபபில், மகாகவி இதழ் நடத்திய மகாகவி ஹைக்கூ விருது 2016 வழங்கும் விழா, 10-10-2026 அன்று மாலை திருச்சி சுருதி மகாவில் சிறப்பாக நடைபெற்றது. சிரா இலக்கியக்கழக தலைவர் கேத்தரீன் ஆரோக்கியசாமி தலைமையில். கவிஞர் நா.வே. அருள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் மகாகவி இதழாசிரியர் வதிலை பிரபா நோக்கவுரையாற்றினார்,

பாரதி பாரதிதாசன் கவிதை அமைப்பு நிறுவனத் தலைவர் திருவை பாபு, தென்னங்கூர் கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் உ. பிரபாகரன், ஆசா கல்வி சமூக அறக்கட்டளை நிறுவனர் கவிஞர் ஆரிசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், பொ.செந்திலரசு, (மலரத் துடிக்கும் சாக்ய நெருஞ்சி)  மா.காளிதாசன்,( பறவை தூக்கிச் செல்லும் இருள்) கன்னிக்கோயில் ராஜா ( யோசா பூசனின் காகங்கள்) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது,
முனைவர் ஜோ.பிரேமா கிறிஸ்டி, கவிஞர் ம. திருவள்ளுவர் ஆசியோர் விருது பெற்ற நூல்கள் குறித்து ஆய்வுரை நிகழ்த்தினர், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க கெளரவத் தலைவர் செளமா இராஜரெத்தினம் விருது வழங்கி சிறப்புரையாற்றினர்,

இனிய நந்தவனம் மாத இதழ் ஆசிரியர், நந்தவனம் சந்திரசேகரன் கவிக்கோவும், ஹைக்கூவும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார், முன்னதாக தூய வளனார் கல்லூரி தமிழ்த்துரை ஒருங்கிணைப்பாளர் சி. பாக்கிய செல்வரதி அனைவரவேற்றார், காவிரிக் கவித்தமிழ் முற்றம் செயல் இயக்குநர் டயானா  நன்றி கூறினார். அரிமா முகமது சபி, கவிஞர் திருவைக்குமரன், கவிஞர் சேது மாதவன் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர். மகாகவி இணையாசிரியர் முனைவர் ஜா.சலேத் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts