கவிக்கோவும், ஹைக்கூவும்!
திருச்சிராப்பள்ளி காவிரிக் கவித்தமிழ் முற்றும் நடத்துகிற கவிக்கோ ஞானத்தால் நிறைந்த வானம் தொடர் நிகழ்வின் 22 வது நிகழ்வு 10.10.2026 அன்று சுருதி மகாலில் நடைபெற்றது.
சிரா இலக்கியக் கழகத் தலைவர் முதுதமிழ் எழிலரசி கேத்தரீன் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். பன்னாட்டு லயன் சங்கங்களின் மேனாள் ஆளுநர் திருச்சிராப்பள்ளி மாவட்ட எழுத்தாளர் சங்க கௌரவத் தலைவர் சௌமா இராஜரத்தினம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.

வீடியோ நந்தவனம் ஆசிரியர் கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன் சிறப்புரை வழங்கினார். கவிஞர்கள் வதிலை பிரபா, ஆரிசன், செந்திலரசு, காளிதாஸ், கன்னிக்கோவில் ராஜா, திருவள்ளுவர், ஜோ.பிரேமா கிறிஸ்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தூய வளனார் கல்லூரி தமிழ்த்துறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாக்கிய செல்வ ரதி வரவேற்புரையாற்றினார். நிறைவில் காவிரிக் கவித்தமிழ் முற்றத்தின் செயல் இயக்குநர் லி.மெர்சி டயானா நன்றியுரை ஆற்றினார். அரிமா. முகமது ஷபி, கல்வியாளர் இரா.ஜெயலட்சுமி, கவிஞர் திருவைக்குமரன், கவிஞர் சேது மாதவன், கல்லூரி மாணவர்கள் பிரான்சிஸ் ஆன்டனி, ஆசிக்டோனி ஜோ.காயத்ரி, ஹக்கீம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை முனைவர் ஜா.சலேத் தொகுத்து வழங்கினார்.














