• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற உலகப் பார்வை தின விழிப்புணர்வுப் பேரணி!
தமிழ்நாடு

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற உலகப் பார்வை தின விழிப்புணர்வுப் பேரணி!

Email :2

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற
உலகப் பார்வை தின விழிப்புணர்வுப் பேரணி!
உலகப் பார்வை தினத்தையொட்டி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, திருச்சி வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து “உலகப் பார்வை தின விழிப்புணர்வு நடைப்பயணப் பேரணியை நடத்தியது. இப்பேரணியில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும், யூத் ரெட் கிராஸ் சங்க மாணவர்களும் பங்கேற்றனர்.
கல்லூரி முதல்வர் அருள்முனைவர் கு. ஆரோக்கியம் சே.ச. தலைமையில் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய

இப்பேரணியைத் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஸ்ரீரங்கம் சரக உதவிக் காவல் ஆணையர் சீதாராமன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இப்பேரணி திருச்சிராப்பள்ளி தில்லைநகர் ஏபிசி மருத்துவமனை வரை நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், கண் பராமரிப்பு பற்றிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை க் கையில் ஏந்தி நடைப்பயணம் மேற்கொண்டனர். 

இப்பேரணிக்கான ஏற்பாடுகளை  துணை முதல்வர் முனைவர் ஜெ. சார்லஸ்,  நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் பிரான்சிஸ் விஜயகுமார்,  அருள் ஞானபிரகாசம் மற்றும் யூத் ரெட் கிராஸ் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் எம்.பிரான்சிஸ் சத்தியசீலன், முனைவர் கு. அந்தோணி ராஜா, முனைவர் பி. நளினி, முனைவர் எச்.ஜாய் பிரபு ஆகியோர் சிறப்பாகச் செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts