• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், முதியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், இன்று 13.10.2026 காலை திருச்சி பொன்மலைப்பட்டி பாவை அறக்கட்டளையின் அன்புச் சோலை மையத்தில் “ஓய்வூதியம் குறித்த விழிப்புணர்வு மற்றும் நிதிப் பாதுகாப்பு” நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு

திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், முதியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், இன்று 13.10.2026 காலை திருச்சி பொன்மலைப்பட்டி பாவை அறக்கட்டளையின் அன்புச் சோலை மையத்தில் “ஓய்வூதியம் குறித்த விழிப்புணர்வு மற்றும் நிதிப் பாதுகாப்பு” நிகழ்ச்சி நடைபெற்றது.

Email :69

முதியோருக்கான ஓய்வூதியம் மற்றும் நிதிப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், முதியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,

“முதியோருக்கான டிஜிட்டல் மற்றும் நிதியியல் கல்வித் திட்டம்” என்ற தலைப்பில் ஐந்து நாள் விழிப்புணர்வுத் திட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் நான்காம் நாள் நிகழ்ச்சி இன்று 13.10.2026 காலை 10.30 மணியளவில், திருச்சி பொன்மலைப்பட்டி பாவை அறக்கட்டளையின் அன்புச் சோலை மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் கருப்பொருளாக “ஓய்வூதியம் குறித்த விழிப்புணர்வு மற்றும் நிதிப் பாதுகாப்பு” அமைந்தது.

நிகழ்ச்சியில், பாவை அறக்கட்டளையின் கண்காணிப்பாளர் திரு C. தினேஷ் பாபு வரவேற்புரை வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி A. விஜயலட்சுமி தலைமையுரையாற்றினார்.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) திருச்சி ராக்ஃபோர்ட் கிளை மேம்பாட்டு அலுவலர் திரு. K. வர்ஷினி நிகழ்ச்சி வளவாளராகக் கலந்து கொண்டு, முதியோருக்கான ஓய்வூதியத் திட்டங்கள், நிதிப் பாதுகாப்பு, சேமிப்பின் அவசியம் மற்றும் முதுமைக் காலத்தில் பொருளாதாரச் சுயசார்புடன் வாழ்வதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மகளிர் அதிகாரமளித்தல் மைய பாலின வல்லுநர் திருமதி S. மெஹருன் நிஷா நன்றியுரையாற்றினார்.

முதியோர் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பலன்கள் மற்றும் நிதிச் சேவைகள் குறித்த விழிப்புணர்வைப் பெற்று, பொருளாதாரப் பாதுகாப்புடன் கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதை இந்நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts