• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழா: நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா சிறப்புரை!
தமிழ்நாடு

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழா: நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா சிறப்புரை!

Email :2

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழா: நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா சிறப்புரை!
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழா நடைபெற்றது. கல்லூரி நுண்கலைக்குழு  இறைவணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்நிகழ்வில்  கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ஆரோக்கியம் சே.ச. வரவேற்புரையாற்றினார்.

கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கில் சே.ச. அவர்களின் ஆசியுரை வழங்கினார். கல்லூரி செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச. வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து அரசியல் சாசன நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.

அவர் கருத்துரையில், திருச்சி தூய வளனார் கல்லூரி திருச்சிக்கு மட்டும் பெருமை இல்லை இந்தியாவுக்கே பெருமை. இந்திய அரசியலமைப்பு குழுவில் உறுப்பினராக அருட்தந்தை ஜெரோம் டிசோசா உலவிய மண்ணில் இந்த நிகழ்வில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக கலந்து கொள்வதில் மனம் நெகிழ்கிறது.

எல்லாவற்றிலும் முன்னதாக நிற்கும் கல்லூரி தூய வளனார் கல்லூரி, அரசியலமைப்பு தினத்தையும் முன்னதாகவே கொண்டாடுகிறது. நம் நாட்டில் உயர்ந்தது அரசியல் சட்டமே. என்று தெரிவித்தார்.

தொடந்து இந்திய அரசியலமைப்பு குறித்து நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ரீல்ஸ் மேக்கிங் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு நிகழ்வை கல்லூரி துணை முதல்வர் அருள் முனைவர் அருள்ஒளி சே.ச. ஒருங்கிணைத்தார். கல்லூரி இணை முதல்வர் முனைவர் த.குமார் நன்றியுரை ஆற்றினார். மாணவர்கள் கிஷோர் மற்றும் இன்பேன்டா ஆகியோர் நெறியாளுகை செய்தனர். தேசிய கீதத்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts