• Home
  • தமிழ்நாடு
  • செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் பெண்கள் திறன் மேம்பாட்டு நிகழ்வு!
தமிழ்நாடு

செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் பெண்கள் திறன் மேம்பாட்டு நிகழ்வு!

Email :3

செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் பெண்கள் திறன் மேம்பாட்டு நிகழ்வு! திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறை சார்பாக பெண்கள் திறன் மேம்பாட்டு நிகழ்வு நடைபெற்றது.
கல்லூரியின் துணை முதல்வர் சி.பி.அக்டோவியா அந்தோணி சேசம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஆ. ஜோசப் சகாயராஜ் வாழ்த்துரை வழங்கினார்.  பணிமுறை இரண்டு தமிழ்த்துறையின் ஒருங்கிணைப்பாளர் திருமிகு சி பாக்கிய செல்வ ரதி முன்னிலை வகித்தார்.
மதுரை பாத்திமா கல்லூரி தமிழ் உயராய்வு மைய இணைப் பேராசிரியரும் துறைத் தலைவருமான முனைவர் இரா. டயானா கிறிஸ்டி சிறப்பு விருந்திதனராகப் பங்கேற்று இன்றைய உலகில் பெண்களின் பாதுகாப்பும் விழிப்புணர்வும் என்கிற பொருண்மையில் உரையாற்றினார். 
அவருடைய உரையில் பாதுகாப்பு என்பதை மறு வரையறை செய்ய வேண்டும் என்கிற புதிய கண்ணோட்டத்தோடு உரையைத் தொடங்கிய அவர் தனிநபர் பாதுகாப்பின் அடித்தளம், நெருக்கடிகளில் ஒரு நங்கூரம், சுய வழக்காடல், பாதுகாப்பின் கூட்டுப் பொறுப்பு, அனுஃபன்யோகி உள்ளிட்ட சுய விழிப்புணர்வுப் பயிற்சிகளை சுட்டிக்காட்டினார்.

அறிவும், உணர்வும் நிறைந்த தகவல்  தொடர்பாளர்களாக பெண்கள் உருவாக வேண்டும்   உள்ளிட்ட கருத்துக்களையும் பதிவு செய்தார் முன்னதாக முதுகலை மாணவி செ ஜா அரசி மார்லின்  வரவேற்புரையாற்றினார். நிறைவில் முதுகலை மாணவி சந்தியா மேரி நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிகளை திருமிகு கீர்த்தனா நெறியாள்கை செய்தார்.  நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி ஷகிலா பானு, மேனாள்துறைத் தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி உள்ளிட்ட பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், முதுகலை மற்றும் இளங்கலைத் தமிழ் மாணவர்கள் பங்கேற்றுப் பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts