• Home
  • தமிழ்நாடு
  • செயின்ட் ஜோசப் கல்லூரியில் உலக மனநல தின விழா
    விளையாட்டுகள் மூலம் மனநல விழிப்புணர்வு!
தமிழ்நாடு

செயின்ட் ஜோசப் கல்லூரியில் உலக மனநல தின விழா
விளையாட்டுகள் மூலம் மனநல விழிப்புணர்வு!

Email :5

செயின்ட் ஜோசப் கல்லூரியில் உலக மனநல தின விழா
விளையாட்டுகள் மூலம் மனநல விழிப்புணர்வு!
திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரியில் கல்லூரியில் உலக மனநல தினத்தை முன்னிட்டு, ஆலோசனை உளவியல் துறைத் தலைவர் முனைவர் ஜான் பாலையா அவர்களின் ஏற்பாட்டில், உலக மனநல தின விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அருள்முனைவர், கு.ஆரோக்கியம், சே.ச., இணை முதல்வர் முனைவர் த.குமார், முன்னாள் மாணவர் சங்க இயக்குநர் அருள்தந்தை டாக்டர் அந்தோணிசாமி, உளவியல் ஆலோசகர் அருள்தந்தை ஓய்.எஸ் யாகு மற்றும் மாணவர் ஆலோசகர் திருமதி வனிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
ஆலோசனை உளவியல் துறை மாணவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, மனநலம் மற்றும் உளவியல் சார்ந்த விளையாட்டுகள் மற்றும் செயல்பாட்டு அரங்குகளை அமைத்திருந்தனர்.

சுயமதிப்பீடு நினைவாற்றல், கவனத்திறன், புலனுணர்வு, படைப்பாற்றல், ஆளுமை அறிதல், உணர்வு வெளிப்பாடு, நேர்மறைச் சிந்தனை, மற்றும் குழு ஒத்துழைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு பல்வேறு விளையாட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. புதிர்கள், நினைவாற்றல் விளையாட்டுகள், ஓவியச் செயல்பாடுகள், சொல் விளையாட்டுகள், ஆளுமை சார்ந்த சவால்கள், உணர்வுகளை அடையாளம் காணும் செயல்பாடுகள் மற்றும் குழு விளையாட்டுகள் எனப் பல்வேறு அனுபவங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இவ்விளையாட்டுகள் மாணவர்களுக்கு கல்விச் சுமையிலிருந்து சிறிது நேரம் விடுபட்டு மனதிற்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, உளவியல் சார்ந்த கருத்துகளை எளிய முறையில் புரிந்துகொள்ளவும், உணர்வுகளை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்தவும், பிறருடன் நேர்மறையான உறவுகளை வளர்த்துக்கொள்ளவும் உதவின. பங்கேற்பாளர்கள் இச்செயல்பாடுகள் மூலம் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் பெற்றதாகத் தெரிவித்தனர்.

மனநலம் என்பது மனநலப் பிரச்சினைகள் இல்லாத நிலை மட்டுமல்ல; அன்றாட வாழ்க்கையில் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, நேர்மறையாகச் சிந்தித்து, ஆரோக்கியமான உறவுகளை வளர்த்துக்கொள்வதுமாகும் என்பதை இந்நிகழ்ச்சி அனுபவப்பூர்வமாக எடுத்துரைத்தது. மாணவர்களின் உற்சாகமான பங்கேற்புடன் உலக மனநல தின விழா சிறப்பாக நிறைவடைந்தது. 1,350 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாட்டுகளில் ஈடுபட்டனர். ஒவ்வொரு அரங்கிலும் மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று, தங்களது சிந்தனைத் திறன், நினைவாற்றல், கவனத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். மேலும், நேர்மறையான வாசகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts