• Home
  • தமிழ்நாடு
  • இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கப் பயிற்சி – செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது.
தமிழ்நாடு

இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கப் பயிற்சி – செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது.

Email :4

இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கப் பயிற்சி – செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி
திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் செப்பர்டு – சமூகக் கலை மற்றும் அறிவியல் மேம்பாட்டுத்துறை மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்தின் உன்னத் பாரத் அபியான் இயக்கம் ஆகியவற்றின் சார்பாக, கல்லூரியின் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கப் பயிற்சி கல்லூரியின் கே.பி. ஜோசப் அரங்கில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் ஆரோக்கியம் சே.ச. அவர்கள் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து ஆசியுரை வழங்கினார். அப்போது, சமூக நலனில் மாணவர்களின் பங்களிப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவை மாணவர்களின் வாழ்க்கையைச் சிறப்புறச் செய்வதோடு, அவர்களின் எதிர்காலத்திற்கும் வழிகாட்டியாக அமையும் என்று எடுத்துரைத்தார்.

மேலும், கல்லூரியின் இணை முதல்வர் முனைவர் குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தனது உரையில், சமூகப் பணிகளில் ஈடுபடும் மாணவர்கள் சமூக மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுத்து, மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், செப்பர்டு திட்டமானது மாணவர்களிடம் தலைமைப் பண்பு, ஒழுக்கம், முடிவெடுக்கும் திறன் மற்றும் பிறரை மதிக்கும் பண்பு ஆகியவற்றை வளர்க்கிறது என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக, விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே.ச. அவர்கள் தொடக்கவுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, செப்பர்டு திட்டத்தின் கீழ் சமூகப் பணிகளில் ஈடுபடும் மாணவர்கள் தங்களது பாடத்திட்டத்தின் அடிப்படையில் திட்டப்பணி அறிக்கைகளைத் தயாரித்தல் மற்றும் அவற்றைச் செயல்படுத்துதல் குறித்து விளக்கவுரையாற்றினார்.
முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் அவர்கள் தனது விளக்கவுரையில், செப்பர்டு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், கடந்த 40 ஆண்டுகளாக மாணவர்கள் கிராமப்புற மக்களின் நலன் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக மேற்கொண்டு வரும் பல்வேறு பணிகள் குறித்தும் செயல்முறை விளக்கக் காட்சிகள் வாயிலாக எடுத்துரைத்தார்.

ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் அவர்கள், மாணவர்கள் கிராமங்களுக்குச் செல்வதற்கு முன்பும், சென்றுவந்த பின்னரும் தயாரிக்க வேண்டிய அறிக்கைகள், அவற்றைச் செயல்முறைப்படுத்துதல், ஆவணப்படுத்துதல் மற்றும் கிராமங்களுக்குச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் குறித்து விளக்கினார்.
ஒருங்கிணைப்பாளர் யசோதை அவர்கள் வரவேற்றார் முடிவில் ஒருங்கிணைப்பாளர் சுதாகர் நன்றி கூறினார்.

ஒருங்கிணைப்பாளர் ரட்சனர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் பணியமர்வு 1 மற்றும் 2 பிரிவுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் உட்பட சுமார் 1200 மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கான தொழில்நுட்ப உதவிகளை இளநிலை உதவியாளர் அமலேஸ்வரன் அவர்கள் மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts