
இன்பென்றினா மிராக்ளின், என் சாதனைகள் பின்வருமாறு,
பள்ளி அளவில் ஏறத்தாழ பத்து கட்டுரைகளும், மாவட்ட அளவில் பத்திற்கு மேற்பட்ட கட்டுரைகளும் எழுதி வெற்றி பெற்றுள்ளேன். மாநில அளவில் இரண்டு கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு, ஒன்றில் வெற்றி பெற்றேன்.

சில கவிதை போட்டிகளில் பள்ளி அளவில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளேன். கொரோனா காலத்தில் அனைவரும் வீடுகளில் முடங்கிய போது காமராஜரின் தன்னலமற்ற பணிகளின் மேல் ஈர்ப்பு கொண்டு அவருடைய பிறந்தநாள் மலர்கள் அதாவது மாலைமலர் நாளிதழில் வெளியிடப்பட்ட அவரது பிறந்த நாள் மலர்களை வருடம் தோறும் படித்து அதை ஒரு ஒரு ஏட்டில் குறித்து வைப்பது என் பழக்கமாயிற்று.

தொடர்ந்து ஆங்கிலம் ,தமிழ் கையெழுத்துப் போட்டிகளில் பங்கெடுத்தேன். மாவட்ட அளவில் நடைபெற்ற MANSA CALLIGRAPHY போட்டியில் பங்கெடுத்து இறுதிப் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டேன். எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஐந்தாம் வகுப்பில் மேடையில் பேச தொடங்கினேன். என்னுடைய முதல் மேடைப்பேச்சு காமராஜரை பற்றியதாக அமைந்தது. அன்று முதல் காமராஜர், காந்தி, மு. மேத்தா, கண்ணதாசன் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரைப் பற்றி பேசி உள்ளேன்.
டொன்போஸ்கோ தொலைத்தொடர்பு மையத்திலிருந்து போதை ஒழிப்பிற்காக கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். திருச்சி மாநகராட்சி சார்பாக நடத்தப்பட்ட நெகிழி ஒழிப்பு, குப்பைகளின் பாகுபாடு பற்றிய போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்றேன். மாநில அளவில் அணுசக்தி துறை சார்பாக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றத்தில் அவ்வை பெருமாட்டி பற்றி பேசி பெரும் பாராட்டை பெற்றேன்.
திருச்சி கேம்பியன் பள்ளியில் நடைபெற்ற கேம்போபெஸ்ட் விழாவில் மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப்போட்டி ஆகியவற்றில் பங்கெடுத்து வெற்றி பெற்றேன். கலையில் மிகவும் ஆர்வம் கொண்டு என்னுடைய ஓய்வு நேரங்களில் படங்கள் வரைவதும் ஓவியம் தீட்டுவதும் கைவினைப் பொருட்களை செய்வதுமாக இருப்பேன்.

இந்தியன் மிஷனரி சொசைட்டி சார்பில் திருச்சி மறை மாவட்ட அளவில் நடத்தப்பட்ட வேதாகம வினாடி வினா போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றேன். இறுதியாக எழுதிரள் வழங்கும் தமிழ் மாணவர் விருதுகளில் எழுத்தாளராக விருது பெற்றேன் என்பதில் மிகவும் மிகவும் அகமகிழ்கின்றேன். விருதை எனக்கு வழங்க தேர்வு செய்த எழுதிரள் வழங்கும் தமிழ் மாணவர் விருதுகள் – 2024 நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.














