• Home
  • தமிழ்நாடு
  • 2025 புத்தாண்டை முன்னிட்டு அரசு மருத்துவமனை முதன்மையர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பு!
தமிழ்நாடு

2025 புத்தாண்டை முன்னிட்டு அரசு மருத்துவமனை முதன்மையர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பு!

Email :141

2025 புத்தாண்டை முன்னிட்டு அரசு மருத்துவமனை முதன்மையர் அவர்களை மரியாதை நிமித்தமாக நான் சந்தித்து பொன்னாடை அணிவித்துடன் ஏழை நடுத்தர நோயாளிகளும்  காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களும் அரசு ஓய்வூதியதாரர்கள் உம் காவல்துறையினரும் புற்றுநோய் சிகிச்சை பெற தரமான வார்டு அமைக்கவும்  பெட் ஸ்கேன் வசதியையும் ரேடியேஷன் ட்ரீட்மென்ட் வசதியையும் குறைவான கட்டணத்தில் பெறும் வகையில் அரசிடமும் துறை இயக்குனரிடம் உம் வலியுறுத்தி ஆவன செய்திட கோரிக்கை மனு நேரில் அளித்தேன்.  பணிகள் நடைபெற்று வருவதாக அறிந்தேன்.

ஆயினும்  திருச்சி ஜி.எச்.ல் இடவசதி இல்லாத காரணத்தால்    பஞ்சப்பூருக்கு இடமாற்றம் ஆகி மத்திய பேருந்து நிலையம் மிக விரைவில் திறப்புவிழா காண உள்ள நிலையில் தற்போதைய மத்தியப் பேருந்து நிலைய காலியிடத்தை கோரிப்பெற அரசுக்கு வலியுறுத்தி  பெற முயற்ச்சிக்க கேட்டுக்கொண்டேன்.இந்த இடம் மையப் பகுதியாக உள்ளதால் திருச்சி உள்பட புதுகை கருர் பெரம்பலூர் அரியலூர் உள்ளிட்ட புற்று நோய் பாதித்த மக்களும் மார்பகப் புற்றுநோய் சிகிச்சை பெறும் மகளிரும் பயன் பெறுவார்கள்.குறிப்பாக இந்த இடம்  அரசு ஒதுக்கினால் தரமான புற்றுநோய் பெற உள்நோயாளிகள் புற நோயாளிகள் வார்டு டன் ரேடியேஷன் பெட் ஸ்கேன் கருவிகளை பொறுத்து இதன்மூலம் குறைவான கட்டணத்தில் பெட் ஸ்கேன் எடுக்க வசதியாக அமையும். திருச்சி‌மண்ணின் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும் மேன்மைமிகு  திருச்சி கரூர் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அரசிடம் குரல் கொடுத்து வலியுறுத்தி திருச்சியில் மக்களுக்கு வசதியான முறையில் திருச்சி ஜங்ஷன் மத்திய பேருந்து நிலையம் மாறிய பின் அந்த இடத்தை கோரிப்பெற ஆவன செய்திட மக்கள் நலன் கருதி கோரிக்கையை நிறைவேற்றிட ஆவன செய்திட வேண்டும்.( ஜி.எச்.வளாக பகுதியில்‌தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில இளைஞர் அணி செயலாளர் அவர்களும் மகளிர் அணி அமைப்பாளரும் வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்து 2025 ஆம் ஆண்டுக்கான அரசு அலுவலர் ஒன்றிய டைரியை வழங்கி மகிழ்ந்தனர்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts