• Home
  • தமிழ்நாடு
  • சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன்  திருக்கோவிலில் நடைபெற்ற பச்சைபட்டினி விருதம் மற்றும் சித்திரை தேர் திருவிழா!
தமிழ்நாடு

சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன்  திருக்கோவிலில் நடைபெற்ற பச்சைபட்டினி விருதம் மற்றும் சித்திரை தேர் திருவிழா!

Email :14

உலகப் பிரசித்தி பெற்ற திருச்சிராப்பள்ளி அருள்மிகு சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன்  திருக்கோவிலில் நடைபெற்ற பச்சைபட்டினி விருதம் மற்றும் சித்திரை தேர் திருவிழா கொடி ஏற்றத்தை முன்னிட்டு திருக்கோவில் நிர்வாகத்தின் அழைப்பிதலை ஏற்று ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி நிர்வாகத்தின் வழிக்காட்டுதலின் படி

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் ஆ. அருண் பிரகாஷ்,  முனைவர் ரா.முத்துக்குமார், திரு. செ.மணிவேல், மற்றும் முனைவர் ஞா.பிரசன்னா வனிதா அவர்கள் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வல மாணவ மாணவிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர்  08.03.2026 முதல் 29.03.2026 வரையும் மற்றும் கொடியேற்ற விழா நாளான 05.04.2026 ஆகிய இன்றும் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்த அனைத்துதரப்பு பக்தர்களுக்கு குடிநீர் வழங்குதல், கூட்ட நெரிசலை சீர்படுத்துதல், குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்குதல், மற்றும் அன்னதானம் வழங்குதல் போன்ற தன்னார்வல சேவைகள் செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts