• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பார்டு சார்பாக கல்லூரியின் இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு விரிவாக்கத்துறையின் சமூதாய மேப்பாட்டிற்கான  புத்தாக்கப்பயிற்சி கல்லூரியின் கே பி ஜோசப் அரங்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பார்டு சார்பாக கல்லூரியின் இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு விரிவாக்கத்துறையின் சமூதாய மேப்பாட்டிற்கான  புத்தாக்கப்பயிற்சி கல்லூரியின் கே பி ஜோசப் அரங்கில் நடைபெற்றது.

Email :19

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பார்டு சார்பாக கல்லூரியின் இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு விரிவாக்கத்துறையின் சமூதாய மேப்பாட்டிற்கான  புத்தாக்கப்பயிற்சி கல்லூரியின் கே பி ஜோசப் அரங்கில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் ஆரோக்கியம் சே ச இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சமூதாயநலனில் மாணவர்களின் பங்கு அர்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மை இவைகள் மாணாக்கர்களின் வாழ்கையில் ஒளியேற்றும் என்று கூறி ஆசியுரை வழங்கினார்.

மேலும் இணைமுதல்வர் முனைவர் குமார் சமூகப் பணியில் சமூகமேம்பாட்டிற்கான திட்டங்கள் வகுத்து மக்களின் முன்னேற்றத்திற்கு  வழிவகைகள் செய்யவேண்டும் மேலும் செப்பர்டு திட்டமானது தலைமை பண்பு ஒழுக்கம் முடிவேடுக்கும் திறன் மரியாதை ஆகியவற்றை மாணாக்கர்களுக்கு வளர்க்கிறது என கூறி வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச தொடக்கவுரையற்றினார் அதன் பின்னர் செப்பர்டு திட்டத்தில் சமூகப்பணிகளில் ஈடுப்படும் மாணாக்கர்கள்  தங்களின் பாடத்திட்டத்தினை அடிப்படையாக கொண்ட திட்டபணி அறிக்கை தயார் செய்தல் அவற்றை செயல்முறை படுத்துதல் பற்றி விளக்கவுரையாற்றினார்
முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் தனது விளக்கவுரையில் செப்பர்டு திட்டம் பற்றியம் 40 வருட காலமாக மாணாக்கார்கள் கிராம புற மக்களுக்காகவும் சமூக மேம்பாட்டிற்கான செய்து கொண்டிருக்கிற செயல்பாடுகள் பற்றியும் செயல்படக்காட்சிகள் வழியாக விளக்கி கூறினார்.

ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் கிராமத்திற்கு செல்வதற்கு முன்பும்  பின்பும் செய்ய கூடிய அறிக்கை தயார் செய்தல் அதன் செயல்முறை ஆவணப்படுத்தல் மாணாக்கர்கள் கிராமங்களுக்கு செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் எடுத்துக் கூறினார்
ஒருங்கிணைப்பாளர் சுதாகர் வந்தவர்களை வரவேற்றார் ஜோசப்கிறிஸ்துராஜா முடிவில் நன்றி கூறினார்.

ஒருங்கிணைப்பாளர் யாசோதை இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் இந்நிகழ்ச்சியில் பணியமர்வு 1 மற்றும் 2 ன்  பேராசிரியர்கள் மாணாக்கார்கள்  உட்பட  2000  கலந்து கொண்டார்கள்.
தொழில் நுட்ப உதவிகளை இளநிலை உதவியாளர் அமலேஸ்வரன் செய்திருந்ததார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts