தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்!
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 27.09.2026 இன்று பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்டத் தலைவர் ஜான்சன் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் பேரா.அருண்விவேக் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை ஒருங்கிணைத்தார். இரண்டு மாத எதிர்காலத் திட்டங்களாக, துளிர் அறிவியல் திருவிழா, திறனறிதல் தேர்வு, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, கருத்தாளர் பயிற்சி போன்றவை முன்வைத்து பேசப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில துணைத் தலைவர் சிவஸ்ரீ ரமேஷ், மாநிலச் செயலாளர் மு.மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு மாவட்டப் பணிகளை பாராட்டி நிறைவுரை வழங்கினார். நிறைவாக மாவட்ட துணைத் தலைவர் மு.மாணிக்கத்தாய் நன்றி கூறினார்.















