தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், பாராட்டுச் செய்தி! பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 120-க்கும் மேல் ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் 34 ஆய்வறிக்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து கீழ்கண்ட பள்ளியில் இருந்து இரண்டு ஆய்வு அறிக்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு குழந்தை விஞ்ஞானி என்று விருது வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பள்ளி : மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சுப்பிரமணியபுரம் – திருச்சி மேற்கு ஒன்றியம்
ஆய்வுத் தலைப்பு,
வீட்டுக் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம்
குழுத் தலைவர்,
செல்வி. ர. ஆருஷி மீனா
குழந்தை விஞ்ஞானி
ஏழாம் வகுப்பு
குழு உறுப்பினர்,
செல்வி. சு. அம்ருத வர்ஷினி
குழந்தை விஞ்ஞானி
ஏழாம் வகுப்பு
வழிகாட்டி ஆசிரியர்,
திருமிகு. ஆர். ஜெபா ஃபெல்சி,
பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்)
பள்ளி : ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தா.சொக்கநாதப்பட்டி – மருங்காபுரி ஒன்றியம்
ஆய்வுத் தலைப்பு,
தடுப்பணைகளின் மகத்தான தாக்கங்களும் பயன்களும்.
குழுத் தலைவர்,
செல்வன். ச. போசராசன்
குழந்தை விஞ்ஞானி
எட்டாம் வகுப்பு
குழு உறுப்பினர்,
செல்வன். து. சந்தோஷ்குமார்,
குழந்தை விஞ்ஞானி
எட்டாம் வகுப்பு
வழிகாட்டி ஆசிரியர்,
திருமிகு. நா. சுஜித்ரா,
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)
மாணவர்களை சிறப்பாக ஊக்கப்படுத்தி, வழிநடத்திய தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருச்சிராப்பள்ளி மாவட்ட மையத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்,
ஜான்சன் பிரான்சிஸ்,
மாவட்டத் தலைவர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
மு. மணிகண்டன்,
மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
ச. மாரிமுத்து,
மாவட்டப் பொருளாளர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
து. காந்தி,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
குழந்தைகள் அறிவியல் மாநாடு.
முனைவர். மு.அ. ரிபாயத் அலி,
மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர்,
குழந்தைகள் அறிவியல் மாநாடு.













