ஆவூர் ஊர்புற நூலகத்தில் 2025 பிப்ரவரி மாதத்திற்கான நிகழ்ச்சியாக திருக்குறள் ஒப்பு வித்தல் போட்டி,
by
ப. நாகலெட்சுமி,
நூலகர்,
ஊர்புற நூலகம்,
ஆவூர்,
புதுக்கோட்டை மாவட்டம்.
திருக்குறள் ஒப்பு வித்தல் போட்டி எல். கே. ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ/மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் அதிக பட்சமாக 6 ம் வகுப்பு படிக்கும் நிதர்சனா என்ற மாணவி 135 திருக்குறள் வரை ஒப்புவித்துள்ளார்.

14 பேர் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர். மேலும் 6 முதல் 9 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ/மாணவிகள் புத்தக திறனாய்வு செய்துள்ளனர்.
மேலும் 6 மாணவ/மாணவிகள் தபால் அட்டையில் தாங்கள் வாசித்த நூலிலிருந்து தங்களுக்கு பிடித்த கருத்துக்களை பகிர்ந்து உள்ளனர்.
மேலும் தங்களுக்கு பிடித்த ஓவியங்களையும் வரைந்து கொடுத்துள்ளார்கள்.
மாணவ/மாணவிகள் தொடர்ந்து ஆவூர் நூலகம் வருகை புரிவதற்கு ஆவூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு. சசிக்குமார் ஆசிரியர் அவர்களும் ஆவூர் உதவி பெறும் ஆர். சி. தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திரு. வின்சென்ட் ஜோசப் ஆசிரியர் அவர்களும், ஆசிரியர் திருமதி. சந்தியாசலோமி மற்றும் நூலக நண்பரும் ஆசிரியருமான திருமதி. சகாய மேரி அவர்களும் வாசகர் வட்டத்தலைவர் திருமதி. ஜெய மேரி அவர்களும் நூலக வாசகர் வட்ட உறுப்பினர். சந்தன மேரி ஆகியோர் உறுதுணையாக இருந்துவருகின்றார்கள்.














