“சமூகப் பொறுப்போடு வளர இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும்”. செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற ஜெஸ் (JES) ஸ்கிலர்ஷிப் வழங்கும் நிகழ்வில் கல்லூரி அதிபர் பேச்சு, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் வறுமையான குடும்பப் பிண்ணனி, பெற்றோரை இழந்த மாணவர்கள், குக்கிராமங்களிலிருந்து படிக்கும் முதல் தலைமுறையினர் எனத் தம் மாணவர்களின் குடும்பச் சூழலை ஆய்ந்து ஒவ்வொரு பருவத்திலும் அவர்களுக்கான கல்வி நிதி உதவியைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் இக்கல்வி ஆண்டிற்கான நிதி உதவி வழங்கும் விழா கல்லூரி நூலக அரங்கில் கல்லூரி அதிபர் அருள் முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. தலைமையில் நடைபெற்றது.

280 மாணவர்களுக்கு 14.5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்ட இந்நிகழ்வின் தொடக்கத்தில் இயேசுசபைக் கல்வி உதவித்தொகை ஒருங்கிணைப்பாளரும், கல்லூரியின் துணை முல்வருமான அருள்முனைவர் அருள் ஒளி சே.ச. வரவேற்புரையாற்றினர்.

கல்லூரி அதிபர் தம் ஆசியுரையில் “சமூகப் பொறுப்போடு வளர இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும். அப்படி உறுதியேற்கிற மாணவர்களுக்குக் கல்லூரி நிர்வாகம் எப்போதும் உறுதுணையாக நிற்கும்” என்பதைப் பதிவு செய்தார். தொடர்ந்து இந்நிகழ்வில் கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச. மற்றும் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் கு.ஆரோக்கியம், சே.ச. ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.
இயேசுசபைசபைக் கல்வி நிதி உதவி பெற்ற மாணவர்களும் அவர்களுடைய பெற்றோரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். நிறைவில் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜா.சலேத் நன்றியுரையாற்றினார்.












