• Home
  • தமிழ்நாடு
  • வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டம்!
தமிழ்நாடு

வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டம்!

Email :85

வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டம்!

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டம் இன்று 10.07.2025 திருச்சி மாவட்ட மைய நூலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு வானவில் மன்ற மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் திருமிகு.ச.ஜோதிலெட்சுமி அவர்கள் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலச் செயலாளர் திருமிகு.மு.மாணிக்கத்தாய், திருச்சி மாவட்டத் தலைவர் திரு.ஜான்சன் பிரான்சிஸ், மாவட்டப் பொருளாளர் திரு.ச.மாரிமுத்து, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் திரு.வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாவட்டச் செயலாளர் திரு.மு.மணிகண்டன் அவர்கள் அனைவரையும் வரவேற்று, நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

வானவில் மன்ற மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு.அருண்கார்த்திக் அவர்கள் நிகழ்வு குறித்து அறிமுகவுரை ஆற்றினார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திருச்சிராப்பள்ளி மாவட்ட உதவித்திட்ட அலுவலர் திரு.சு.அன்புசேகரன் அவர்கள் நிகழ்வை தொடக்கி வைத்து துவக்கவுரை ஆற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலச் செயலாளர் திரு.எம்.எஸ்.ஸ்டீபன் நாதன் அவர்கள் அடுத்த ஓராண்டிற்கு எடுத்து செல்ல வேண்டிய செயல்பாடுகள் குறித்து பேசி, வானவில் மன்ற கருத்தாளர்களை பாராட்டி சிறப்புரை வழங்கினார்.

மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் திருமிகு.சு.தனலெட்சுமி, வானவில் மன்ற திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.அவ.இராஜபாண்டி, அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ஞானசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இருந்து கலந்துகொண்ட வானவில் மன்ற கருத்தாளர்கள் தங்களுடைய கடந்த ஆண்டு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிறைவாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருச்சி மாவட்ட இணைச் செயலாளர் திரு.க.பகுத்தறிவன் அவர்கள் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts