திருச்சி தென்றல் நகர் கிளை நூலகத்தில், 57ஆவது நூலக வார விழா நேற்று 24.11.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு இனிதே தொடங்கியது.
இதில் வாசகர் வட்டம் யோகா பேராசிரியர் திரு. ஶ்ரீனிவாஸ் அவர்கள் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்கள். முனைவர் திரு அய்யம்பிள்ளை அவர்கள் தலைமை உரை ஆற்றினார்கள்.
புனித அந்தோனியார் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் திரு.கிருஷ்ணன் அவர்கள் வாசகர் வட்டத்தை சார்ந்த திரு.கெளஸ் முஹய்யதீன் மற்றும் முன்னாள் திஹிந்து ஆசிரியர் திரு.சையது முதஹர் அவர்கள் முன்னிலை உரை ஆற்றினார்கள்.

சிறப்பு அழைப்பார்கள் டாக்டர் லாவண்யா மற்றும் டாக்டர் கிருத்திகா சக்தி வாழ்த்துரை வழங்கினார்கள்.
திருச்சி கே.கேநகரை சுற்றியுள்ள மூன்று பள்ளிக்கூடங்களில் மாணவ,மாணவியர்களுக்கு போட்டி

தேர்வுகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற 120 மாணவக் கண்மணிகளுக்கு சான்றிதழ்களும் புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டது. அய்யப்ப நகர் வாசகர் வட்டத்தை சார்ந்த அன்பு உள்ளங்கள் நிகழ்வை மேலும் சிறப்பாக்கினார்கள்.

அரங்கம் கொள்ளாத அளவிற்கு மாணவ மாணவிகள், பொற்றோர்கள், வாசகர் வட்ட அன்பர்கள்,பொது மக்கள் என திரளானோர் கலந்து கொண்டார்கள்.நிகழ்வை யோகா பேராசிரியர் திருமதி முருகேஸ்வரி ஶ்ரீனிவாஸ் தொகுத்து வழங்கினார்கள்.

நிகழ்வின் நிறைவாக நூலகர் திருமதி ஷகிலா பேகம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள். நாட்டுப்பண்ணுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது. தேசிய நூலக வார விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற உதவிகள் புரிந்த திரு நேரு அய்யா தலைமை ஆசிரியர் திரு லட்சுமணன் அய்யா திரு அழகிரி சாமி அய்யா திரு ஜாவித் உசேன் அவர்களுக்கும் மற்றும் வாசகர் வட்டம் பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
வாழ்க வளமுடன்.
