• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு

திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

Email :215

நேற்று திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தனி வட்டாட்சியர் திரு ராஜேஸ் கன்னா அவர்கள் தலைமையில் திரு R .I.அந்தோணி முன்னிலையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத் தலைவர் கோவிந்தராஜ், தமிழ் நாடு நுகர்வோர் பெடரேஷன் தலைவர் சிவசங்கர் ,தென்னக நுகர்வோர் மக்கள் பாதுகாப்பு தலைவர் மோகன், சமூக சேவை ஒருங்கிணைப்பாளர் மோகன்ராம் மற்றும் எரிவாயு கேஸ் ஏஜென்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு தற்போதைய நுகர்வோர் குறைகள் பற்றியும் அதனை நிவர்த்தி செய்ய வேண்டிய கருத்துக்களை பதிவு செய்தனர்.



நுகர்வோர்கள் சிலரது குறைகள், மற்றும் அதனால் ஏற்படும் அலைச்சல்கள் குறித்து ,கேஸ் ஏஜென்சி பிரதிநிதிகள் விளக்கம் அளித்தனர்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்க தலைவர் தனது உரையில், I.O.C.எண்ணை நிறுவனத்தால் நவீன

முறையில் அறிமுகம் செய்யப்பட்ட காம்போஸிட் சிலிண்டர், அதன் வடிவமைப்பு, உபயோகிக்கும் முறை, பெண்கள் சிரமமின்றி குறைந்த எடையுள்ள சிலிண்டரை எடுத்து செல்லும் வசதி, மற்றும் கேஸின் இருப்பு அளவு (Transparent )வசதி பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.வட்டாட்சியர் நன்றி அறிவிப்புடன் கூட்டம் இனிதே நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts