• Home
  • தமிழ்நாடு
  • ஆசிரியர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவு தேர்வு, மற்றும் தமிழ்நாடு ஊரக திறனறிவு தேர்வு குறித்து பயிற்சி திருச்சி அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி மிளகுப் பாறை பயிற்சி நடைபெற்றது.
தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவு தேர்வு, மற்றும் தமிழ்நாடு ஊரக திறனறிவு தேர்வு குறித்து பயிற்சி திருச்சி அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி மிளகுப் பாறை பயிற்சி நடைபெற்றது.

Email :341

தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக ஆசிரியர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவு தேர்வு, மற்றும் தமிழ்நாடு ஊரக திறனறிவு தேர்வு குறித்து பயிற்சி திருச்சி அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி மிளகுப் பாறை பயிற்சி நடைபெற்றது.


பயிற்சியில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த 57 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.
பயிற்சிக்கு  திட்ட ஆலோசகர் கா. ராஜா ஜெகஜீவன் தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் வெ. பன்னீர்செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
க மகேந்திரன் தனி வட்டாட்சியர் ஆதிதிராவிட நலத்துறை முன்னிலை வகித்தார்.
மாநில கருத்தாளர்களாக K. சின்னமுத்து  பட்டதாரி ஆசிரியர் சேலம், மற்றும் எஸ் சிவக்குமார் முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம். காஞ்சிபுரம் மாவட்டம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவு தேர்வில் தேர்ச்சி வரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 12 ஆயிரம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை கிடைக்கும் .இந்த தேர்வை தற்போது எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதுவார்கள்.
தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1000 வீதம்  ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நான்காண்டுகளுக்கு கிடைக்கும்.
ஆசிரியர்களுக்கு  கற்பித்தல் முறை, செயற்கை நுண்ணறிவு, வினாத்தாள் வடிவம் , போன்றவை பயிற்சி அளிக்கப்பட்டது.
தொடர்பு,
எஸ் சிவகுமார் முதல்வர் பணி நிறைவு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம்
6383690730

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts