• Home
  • தமிழ்நாடு
  •   திரு. G. ராஜா ஜெகஜீவன் திட்ட ஆலோசகர், ஆதிதிராவிட நலத்துறை அவர்கள் பள்ளியில் மேற்பார்வையிட்டார்.
தமிழ்நாடு

  திரு. G. ராஜா ஜெகஜீவன் திட்ட ஆலோசகர், ஆதிதிராவிட நலத்துறை அவர்கள் பள்ளியில் மேற்பார்வையிட்டார்.

Email :398

நேற்று காலை நடைபெற்ற இறைவணக்க கூட்டத்தில் திரு. G. ராஜா ஜெகஜீவன்
திட்ட ஆலோசகர், ஆதிதிராவிட நலத்துறை அவர்கள் கலந்து கொண்டு மாணவர்கள்

கல்வி சிறக்க நல்லதொரு அறிவுரைகளை வழங்கியதோடு இந்திய அரசியலமைப்புச் சட்ட முகப்புரை வாசிப்பை முன்னின்று நடத்தி கொடுத்தார் என்பதை பெருமித்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

மதிப்பிற்குரிய திட்ட ஆலோசகர் திரு. G. ராஜா ஜெகஜீவன் திட்ட ஆலோசகர்,
ஆதிதிராவிட நலத்துறை அவர்கள் 5688 புத்தகங்களுடன் செயல்படும் நூலகத்தை பார்வையிட்டார் அங்கு வைக்கப்பட்டுள்ள வாசிப்பு இயக்கம் மற்றும் நூலக

பதிவேடுகளை பார்வையிட்டு அன்றாடம் பயன்பாட்டில் புத்தகங்கள் உள்ளன என்பதை அறிந்து கொண்டார் மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டு நூலகங்கள் செயல்படுகின்றன என்பதை பெருமிதத்தோடு கூறினார்.


அரசு ஆதிராவிட நல மேல்நிலைப்பள்ளி கலங்காணி நாமக்கல் இங்கு செயல்படும் மூலிகை தோட்டத்தினை மதிப்பிற்குரிய திரு. G. ராஜா ஜெகஜீவன் திட்ட ஆலோசகர்,
ஆதிதிராவிட நலத்துறை அவர்கள் பார்வையிட்டார் அங்கு விளையும்

காய்கறிகள் சத்துணவுக்கு மாணவர்களில் பயன்பாட்டிற்கு அளிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்து கொண்டார்.
இப்படிக்கு,
தலைமையாசிரியர்,
அரசு ஆதிராவிட நல மேல்நிலைப்பள்ளி,
கலங்கானி,
நாமக்கல் மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts