தமிழ்நாடு

எய்ட்ஸ் தினம்
ஒரு பக்க அஞ்சல் தலை கண்காட்சி!

Email :111

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஒரு பக்கம் ஒரு கருப்பொருள் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செய்லர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். முதன்மை அஞ்சல் தலை சேகரிப்பாளர் தஞ்சை காசிநாத் முன்னிலை வகித்தார். அஞ்சல் தலை சேகரிப்பாளர் முத்து மணிகண்ட கார்த்திகேயன் எய்ட்ஸ் தினம் ஒரு பக்க அஞ்சல் தலை கண்காட்சியில் தனது சேகரிப்பினை காட்சிப்படுத்தி

பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஆம் தேதி, உலக எய்ட்ஸ் தினத்தை மக்கள் கடைபிடிக்கின்றனர், இது உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்டவும் ஒரு நாள் ஆகும். இந்தியா மியான்மர் இந்தோனேசியா நாடுகள் எய்ட்ஸ் தினத்திற்கு வெளியிட்ட நினைவார்த்த அஞ்சல் மற்றும் சிறப்பு அஞ்சல் முத்திரையுடன் கூடிய அஞ்சல் உறையினை காட்சிப்படுத்தியும் விளக்கினார். அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் தாமோதரன், மகாராஜா, ரமேஷ், மாதவன், முகமது சுபேர், சந்திரசேகரன், சிவகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts