அரிமாவை அதன்குகையில்
தனியாளாய்ச் சந்தித்தேன்
அடர்வனத்தில் ஒருவனாய்
அச்சமின்றிச் சென்றுவந்தேன்.
ஆழ்கடலில் மூழ்கிமூழ்கி
அழகுமுத்து நானெடுத்தேன்
நீள்நதியில் நீந்திநீந்தி
நிலவழகை ரசித்துவந்தேன்.
வாளெடுத்து வந்தவரை
நேரெதிர்த்துக் கரம்முறித்தேன்
தோள்தட்டிக் குதித்தவரை
மார்தட்டித் தோற்கடித்தேன்.
அஞ்சாமை நெஞ்சிருக்க
எஞ்ஞான்றும் குனிதலில்லை
அறிவாற்றல் துணையிருக்க
எப்பொழுதும் பணிதலில்லை.
எதனையும் எதிர்கொள்வோம்
எமனையும் ஆட்சிசெய்வோம்
அடக்கஒருவன் வருவானெனில்
அடக்கமவனை செய்திடுவோம்.
தமிழினத்தின் பெருமையை
தரணிக்கு எடுத்துரைப்போம்
தன்மானம் நம்அடையாளம்
தனித்தென்றும் காட்டிடுவோம்.
வணக்கத்துடன்:
வீ.கோவிந்தசாமி,
திருச்சிராப்பள்ளி.












