
திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் ஒற்றுமை மேடை சட்ட நாளினை ஒட்டி சந்திப்பு இன்று 29.11.2024 மாலை திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் எதிரில் உள்ள ராணா அரங்கத்தில் நடைபெற்றது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையிலிருந்து மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் ஆகியவற்றை நீக்க கோரிய வழக்கானது கடந்த 25.11.2024 அன்று மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
வரலாற்றுப் போக்கில் மதச்சார்பின்மையும் இந்திய அரசியல் சட்டமும், என்ற தலைப்பில் மாநில துணைத்தலைவர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், கவிஞர் நந்தலாலா உரையாடினார். இச்சந்திப்பில் கலந்துகொண்ட பலர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், சான்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.














