அகில இந்திய கத்தோலிக்க பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு (அஃய்க்கப்), புனித ஜோசப் கல்லூரி கிளையானது நாட்டு நலபணித் திட்டம் மற்றும் மேக்ஷி விஷன் உயர்பல்நோக்கு மருத்துவமனையுடன் இணைந்து டிசம்பர் 3, 4 மற்றும் 5 ஆகிய மூன்று நாட்களை உள்ளடக்கி இரத்தம் மற்றும் கண் தான விழிப்புணர்வு வாரமாக கல்லூரி வளாகத்தில் கொண்டாடியது.


இரத்தம் மற்றும் கண் தான விழிப்புணர்வு வாரத்தின் முதல் நாள் நிகழ்வாக (03/12/24) துவக்க விழாவானது அருட்தந்தை டாக்டர் ஜோசப் சேவியர் சே.ச அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


துவக்க விழாவை தொடர்ந்து மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், கட்டுரை மற்றும் ரங்கோலி போட்டிகள் நடைபெற்றன. பல மாணவர்கள் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.

இரத்தம் மற்றம் கண் தான விழிப்புணர்வு வாரத்தின் இரண்டாம் நாள் 04/12/24 அன்று மாணவர்கள் கண்களை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு கருத்தமர்வு கல்லூரியின் முதல்வர் தந்தை மரியதாஸ் சே.ச அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.


சிறப்பு விருந்தினராக Dr. Shibu Varkey, தலைமை மருத்துவர், மேக்ஷி விஷன் பல்நோக்கு கண் மருத்துவமனை அவர்கள் பங்கேற்று கண்தானத்தின் முக்கியத்துவத்தையும், கண்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
இரத்தம் மற்றும் கண் தான விழிப்புணர்வு வாரத்தின் மூன்றாம் நாள் (05/12/2024) காலை 9.00 மணி் முதல் மேக்ஷி விஷன் பல்நோக்கு கண் மருத்துவமனை


உடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமும், மாகாத்மா காந்தி அரசு மருத்துவமனை, நாட்டு நல பணித்திட்டம், விரிவாக்க துறையுடன் இணைந்து இரத்ததான முகாமும் நடைபெற்றது. இதில் சுமார் 200 கல்லூரி மாணவர்கள் தங்கள் இரத்தத்தை கொடையாக வழங்கினர். மேலும் மாலை 4.30 மணிக்கு விழிப்புணர்வு வார நிறைவு விழா கல்லூரி இணை முதல்வர் டாக்டர் ராஜேந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


அதில் இரத்த தானம் செய்த மாணவர்களுக்கு பாரட்டு சான்றிதழும், இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.


இரத்தம் மற்றும் கண்தான விழிப்புணர்வு வார நிகழ்வுகள் அனைத்தும் கல்லூரி நிர்வாகத்தின் ஆலோசனையில், கல்லூரி அய்க்கஃப் கிளை ஆலோசகர்கள்

அருட்தந்தை. மரிய அன்னராஜ் சே.ச மற்றும் பேரா. ஆரோன் ஜோ எட்வின் அவர்களின் வழிகாட்டலில் அய்க்கஃப் நிர்வாகிகள் மற்றும் மாணவர்களால் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது.













