• Home
  • தமிழ்நாடு
  • 10 அம்ச அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றி தந்திட மக்கள் அதிகாரம் கோரிக்கை!
தமிழ்நாடு

10 அம்ச அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றி தந்திட மக்கள் அதிகாரம் கோரிக்கை!

Email :98

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட செடி மலை முருகன் கோவில் தெரு மக்களின் 10 அம்ச அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றி தந்திட இன்று 02.12.2024 மாலை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தோழர்.செழியன்  தலைமையில் மனுவாக கொடுக்கப்பட்டது.

கோரிக்கைகள்,

துவாக்குடி நகராட்சியே, மாவட்ட நிர்வாகமே!

1. புதிய குடிநீர் குழாய் இணைப்பு பணியில் உள்ள குளறுபடிகளை சரி செய்து அனைத்து மக்களுக்கும் குடிநீர் கிடைக்க வழி வகை செய்!
         சாலையை         
        சீரமைத்து கொடு!

2. சாக்கடையை சீரமைத்து சுகாதாரமாக வாழ வழிவகை செய்!

3. குடிநீர் வழங்குவது தடைப்படும்போதெல்லாம் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து மக்களுக்கு குடிநீர் வழங்கு!

4. தூய்மை இந்தியா தூய்மை பாரதம் என்று சொன்னால் மட்டும் போதாது.. திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து சுகாதாரமான பொது கழிப்பறைகளை உடனடியாக கட்டிக் கொடு!



5. பயன்பாடு இல்லாத வானொலி மன்றத்தை சீரமைத்து, நீண்ட கால கோரிக்கையான படிப்பகம் அமைத்து கொடு!

6. புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருந்து வரும் சிஆர்எஸ்(CRS) கிரஷர் பகுதியில்…
தெரு விளக்குகள், தண்ணீர் தொட்டிகள், கழிப்பறை பராமரிப்பு, சாலை அமைத்தல், போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடு!

7. நாவலர் நெடுஞ்செழியன் தெருமக்களுக்களின் நீண்ட ஆண்டு கால போராட்டமான அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அமரர் ஊர்தி வந்து செல்லும் வகையில் தார் சாலை அமைத்துக் கொடு!

8. நாவலர் நெடுஞ்செழியன் தெரு மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தண்ணீர் தொட்டி அமைத்து கொடு!

9. சிதிலமடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை அகற்றி. புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டிக் கொடு!
 
10. செடிமலை முருகன் கோவில் வளாகம் மது(குடிகாரர்களின்) அருந்துபவர்களின் மனமகிழ் மன்றமாக மாறி உள்ளதை தடுத்து கோவில் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்து!
செ.கார்க்கி
மாவட்ட பொருளாளர்
மக்கள் அதிகாரம்
திருச்சி
72002 09689.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts