திருச்சி மாவட்ட அரிமா சங்கங்கள் இணைந்து நடத்திய 1001 விலையில்லா தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி

இன்று 22.11.2024 காலை திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
324 Fஅரிமா மாவட்டம் ஆளுநர் PMJF Lion Er. A. சவரி ராஜ் அவர்கள் தலைமையில்,
விலையில்லா தலைக்கவசம் வழங்கி பேரணியை துவக்கி வைத்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர்
திருமதி N.காமினி IPS, அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

மாவட்டத் தலைவர்
MJF Lion M. நடராஜன் அவர்கள்
வரவேற்புரை நிகழ்த்தினார்.
உயிர் காக்கும் உன்னத திட்டத்தில் அரிமா மாவட்டத்தின் முன்னாள் ஆளுநர்கள், மண்டல தலைவர்கள், வட்டார தலைவர்கள்,
திருச்சியில் உள்ள அரிமா சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விலையில்லா தலைக்கவசம் வழங்கினார்கள்.

உயிர் காக்கும் உயரிய திட்டமான இலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்வில் திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு விலையில்லா தலைக்கவசம் வழங்கினார்கள்.














