மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பொன்மலை பகுதியில் காந்தி முகமூடி அணிந்து வித்தியாசமான தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மகாத்மா காந்தி அவர்களின் முகமூடி அணிந்த பொதுமக்களை சந்தித்தனர்.

“என் வாக்கு விற்பனைக்கு அல்ல”, “தவறாமல் வாக்களிப்போம்” போன்ற வாசகங்களுடன் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் தேர்தல் திருவிழா அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த வித்தியாசமான முயற்சி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததுடன், 100% வாக்களிப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாக சிறப்பாக அமைந்தது.

ஜனநாயக உரிமையை உணர்த்தும் இந்த விழிப்புணர்வு இதற்கு முன்பு கல்லூரி மாணவிகளிடம், சிலம்பம் சுற்றி, கடைவீதிகள், சந்தை பகுதிகளில் பிரசாரம் செய்து வந்த நிலையில் இப்பொழுது காந்தி முகமூடி அணிந்து வீடு வீடாக, கடைவீதி, நூலகம் போன்ற இடங்களுக்கு சென்று பொது மக்களை கவனத்தை ஈர்த்து பிரசாரம் செய்தார்கள்.

மக்கள் சக்தி இயக்க பண்பாளாளர்கள் தாமோதரன், சுமன்,செந்தில், ராஜேஷ்,சுதன், இளங்கோ, சந்திரசேகர், குமரன் மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள். . . கே.சி.நீலமேகம், மாநிலப் பொருளாளர், மக்கள் சக்தி இயக்கம்.












