திருச்சி பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

இன்று 26.11.2024 நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் காற்று மாசுபாடு, நீர் அனைவருக்கும் இன்றியமையாதது,
ஏவுகணை மாதிரி, கணிம அட்டவணை, தாவர வகைகள், உணவு கலப்படம் பற்றிய விழிப்புணர்வு, அமில கார தன்மைகள், ஒளிச்சேர்க்கை, நியூட்டன் விதி, வேக்கம் கிளீனர், தாவிரவியல், விண்வெளில் விண்கலம், சூரிய மண்டலம், பற்றிய தகவல்களை அழகாக அருமையாக செய்து வந்து அசத்தலான முறையில் வடிவமைத்து வைத்தார்கள்.
மழைநீர் சேகரிப்பு பற்றிய தகவல் இயற்கை முறையில் நடைபெறும் விதத்தை அருமையாக செய்து வைத்திருந்தார்கள்.

அறிவியல் குடுவையின் செய்முறையை வெகு அழகாக வடிவமைத்து வைத்திருந்து கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
மழை பெய்யும் போது காயவைத்த துணிகள் நினையாமல் நாம் எடுக்கும் முறை சிறப்பாக இருந்தது.

வித்தியாசமான அடர்த்தி மிகுந்த திரவத்தை நிரப்பி வித்தியாசம் காண்பித்து விளக்கம் கொடுத்தது மிக சிறப்பாக இருந்தது.
வீடுகளில் பயன்படுத்தும் நீர் நிரப்பும் டேங்க்களில் தண்ணீர் நிரம்பி வழியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டுபிடித்து செய்தது மிக அற்புதமான விஷயம்.

இரவு நேரங்களில் சாலையில் செல்லும் பொழுது சென்சார் கொண்டு செயல்பட்டு கண்கள் கூசாமல் இருக்க விழிப்புணர்வு கொடுப்பது, அலாரம் கொடுக்கும் வகையில் அளவற்ற செய்முறைகள் செய்து வந்து அசத்தியிருக்கிறார்.
பாய்லர் பிளாண்ட் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பிள்ளைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.














