• Home
  • தமிழ்நாடு
  • T.வளவனூர் கிராமத்தில் மிகச் சன்ன இரக நெல் சாகுபடி பற்றிய பண்ணைபள்ளி நடைபெற்றது.
தமிழ்நாடு

T.வளவனூர் கிராமத்தில் மிகச் சன்ன இரக நெல் சாகுபடி பற்றிய பண்ணைபள்ளி நடைபெற்றது.

Email :98

அட்மா திட்டத்தில் பண்ணைப்பள்ளி 
திருச்சி மாவட்டம் இலால்குடி  வட்டாரத்தில் இன்று 05.12.2024 T.வளவனூர் கிராமத்தில் மிகச் சன்ன இரக நெல் சாகுபடி பற்றிய பண்ணைபள்ளி நடைபெற்றது. இதில் திரு.இரா.வடிவேல் வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) கலந்து கொண்டு உலக மண் தினம் பற்றிய விழிப்புணர்வு, மண்வளத்தை காக்கும் முறைகள், காப்பதில் அவசியம் எதிர்கால சந்ததியர்களின் பாதுகாப்பு பாரம்பரிய இயற்கை முறை விவசாயம் அங்கங்க இடுப்பொருட்களின் பயன்பாடு ஆகியவற்றை பற்றி விவசாயிகளுக்கு இடையே விவரித்துக் கூறினார். பின்னர்  திருமதி.கௌசல்யா வேளாண்மை அலுவலர் பேசுகையில் வேளாண்மைத்துறைசார்பில்  செயல்படுத்தும் மானியதிட்டங்கள், இடுபொருட்கள் பற்றி விரிவாக விளக்கி கூறி விவசாயிகள் பெற்றுக்கொள்ள கேட்டுகொண்டார். துணை வேளாண்மை அலுவலர் அய்யாசாமி அவர்கள்  பசுந்தாள் பயிர்கள்  விதைப்பு பற்றி கூறினார்.

வேளாண்மை கல்வி நிலையம் சார்பில் Dr.சிவரஞ்சனி மண்ணியல் பேராசிரியர்  பேசுகையில் மண் பரிசோதனையின் அவசியம் குறித்தும் மண்வள அட்டையில் குறிப்பிட்டபற்றுள்ள  சத்துக்கள் நுண்ணூட்டச் சத்துக்கள் இரண்டாம் நிலை சத்துக்கள் மண்ணின் தன்மை ஆகியவற்றை  எடுத்துக் கூறினார்கள். அதன் பின்பு மண் பரிசோதனை எடுக்கும் முறைகள் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்ய  மண் பரிசோதனை நிலையம் காஜாமலை,திருச்சி மண் மாதிரியுடன் ரூபாய் 15/- கட்டணம்  அளித்தும் மண் மாதிரி,நீர் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் உர மேலாண்மை செய்து மண் வளம் காக்க வேண்டும் என்று கூறினார்கள். அதன் பிறகு  வேளாண்மை உதவி இயக்குநர் பேசுகையில் வேளாண்மை உதவி அலுவலர் திரு ராஜசேகரன் பேசுகையில் வேளாண்மைத்துறையில் திரவ வடிவில் அசோஸ் பைரில்லம்,பாஸ்போ பாக்டீரியா , துத்தநாக சல்பேட் பயன்படுத்தும் முறைகள் பற்றி விரிவாக விளக்கி கூறினார்கள். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு.சபரிசெல்வன் அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

இப்பண்ணைபள்ளியில் T.வளவனூர் கிராம முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  இதற்கான ஏற்பாட்டினை திரு.ராஜசேகரன் உதவி வேளாண்மை அலுவலர்,முன்னோடி விவசாயி திரு.ராஜாராம்,உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு.கார்த்திக் ஆகியோர் செய்து இருந்தனர். இப்பண்ணைபள்ளியில் லால்குடி வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் திரு.சந்திரசேகர்,எடிசன், பிரவின் ,உதவி தொழில்நுட்ப மேலாளர் தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு செய்தியாளர்,
இலால்குடி,
க.ரெங்கநாதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts