திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஒரு பக்கம் ஒரு கருப்பொருள் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார்.

தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்து மணிகண்ட கார்த்திகேயன், தஞ்சை காசிநாத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் தலை சேகரிப்பாளர் முகமது சுபேர் இந்தியா பிற நாடுகளுடன் கூட்டாக வெளியிட்ட அஞ்சல் தலையினை காட்சிப்படுத்தி பேசுகையில், இரண்டு நாடுகள் இணைந்து அஞ்சல் தலை வெளியிடுவதை கூட்டு அஞ்சல் தலை வெளியீடுகள் என்பர். ஒரே தலைப்பு, பொதுவான நிகழ்வு அல்லது ஆண்டுவிழா அல்லது இரு நாடுகளுக்கும் உள்ள ராஜாங்க உறவு அல்லது இரு நாடுகளுக்கும் பொருத்தமான நபரை

நினைவுகூறும் வகையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அஞ்சல் நிர்வாகங்களால் வெளியிடப்படும் அஞ்சல் தலை ஆகும். பொதுவாக ஒரே மாதிரியான வடிவமைப்புகள் அல்லது ஒரே வெளியீட்டுத் தேதி அல்லது நாடு மற்றும் மதிப்பைக் கண்டறிவதில் வகைப்படுத்தப்படுகின்றன என்றார்.
பொருளாளர் தாமோதரன், இணைப் பொருளாளர் மகாராஜா,
அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள்
ரமேஷ், மாதவன், சந்திரசேகரன், சிவகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.












