கன்மலை அறக்கட்டளை 14ஆம் ஆண்டு விழா திருச்சியில் நடைபெற்றது. நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக என்ற நோக்கத்தை கொண்டுள்ள கண்மலை அறக்கட்டளையின் நிறுவனர் வில்பர்ட் எடிசன், பொருளாளர் சகாய ஹெலன் உள்ளிட்ட நிர்வாகிகள் திருச்சியில் இல்லத்தின் முகப்பிலேயே அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகமும் பசிப்பிணியைப் போக்க அன்றாடம் அன்னதானமும், பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகமும் வைத்துள்ளார். மேலும் மயான பூமியில் மனைவி மகளுடன் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாரை திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசனத்தலைவர் முகமது ஷபி முன்னிலையில் பாராட்டினர்.













