• Home
  • தமிழ்நாடு
  • “வகுப்பறையில் கல்வி வளர்ச்சிக்கு ஹார்மோன்களின் பங்கு”.
தமிழ்நாடு

“வகுப்பறையில் கல்வி வளர்ச்சிக்கு ஹார்மோன்களின் பங்கு”.

Email :142

வகுப்பறையில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க ஹார்மோன் சுரப்பை  தூண்டும் செயல்பாடுகள்:
எஸ் சிவக்குமார் முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர்  மற்றும் பயிற்சி நிறுவனம்
காஞ்சிபுரம் மாவட்டம்
மாணவர்களின் அறிவியல், மனநிலை, மற்றும் சுயநலமற்ற ஆர்வத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் வகுப்பறையில் பல்வேறு செயல்பாடுகளை அமைக்கலாம்.
இந்த செயல்பாடுகள் உடலின் முக்கியமான ஹார்மோன்களின் சுரப்பை தூண்டி, கல்வி பயணத்தை மகிழ்ச்சியான மற்றும் பயனுள்ளதாக மாற்றுகின்றன.
ஹார்மோன்கள் எங்கு சுரக்கின்றன?

டோபமின் (Dopamine):
சுரக்கும் இடம்: மூளையின் ஹைபோதாலமஸ் (Hypothalamus) மற்றும் சப்ஸ்டான்சியா நைக்ரா (Substantia Nigra) பகுதியில் சுரக்கிறது.
செரோட்டோனின் (Serotonin):
சுரக்கும் இடம்: மூளையின் ரேப்பி நியூக்லியஸ் (Raphe Nucleus) பகுதியில் சுரக்கிறது.
ஆக்ஸிடோசின் (Oxytocin):
சுரக்கும் இடம்: ஹைபோதாலமஸ் (Hypothalamus) பகுதியில் உருவாகி, பிட்யூட்டரி சுரப்பி (Pituitary Gland) மூலம் சுரக்கிறது.
என்டார்பின்கள் (Endorphins):
சுரக்கும் இடம்: மூளையின் பிட்யூட்டரி சுரப்பி மற்றும் உடலின் நரம்புத் தசைகள்.
அட்ரினலின் (Adrenaline):
சுரக்கும் இடம்: அட்ரினல் சுரப்பி (Adrenal Glands).
கோர்டிசோல் (Cortisol):
சுரக்கும் இடம்: அட்ரினல் சுரப்பி.
ஹார்மோன் செயல்பாடுகள்:
1. டோபமின் (Dopamine) சுரப்பை அதிகரிக்கும்  செயல்பாடுகள் :
டோபமின் மகிழ்ச்சி மற்றும் வெற்றியின் உணர்ச்சியை தூண்டும் ஹார்மோன் ஆகும்.
செயல்பாடுகள் :
மாணவர்களுக்கு சிறிய குறிக்கோள்களை (Goals) அமைத்துக் கொடுத்து, அதை அடையும்போது பாராட்ட வேண்டும்.
சவாலான விளையாட்டுகள்(Chess)

மற்றும்

புதிர்கள்(Cubes,Puzzle) வழங்க வேண்டும்.

“வெற்றி பயணங்கள்” என்ற தலைப்பில் தங்களின் சிறந்த முயற்சிகளை பகிர வாய்ப்பளிக்க வேண்டும்.
பாராட்டு சான்றிதழ் (Certificates) மற்றும் பதக்கங்கள் வழங்க வேண்டும்.
2. செரோட்டோனின் (Serotonin) சுரப்பை ஊக்குவிக்கும்  செயல்பாடுகள் :
செரோட்டோனின் மன அமைதிக்காகப் பயன்படும் ஹார்மோன் ஆகும்.
செயல்பாடுகள் :
மன அழுத்தத்தைக் குறைக்கும்(Yoga)

மூச்சுப் பயிற்சிகளை வகுப்பறையில் நடத்துதல் வேண்டும்.
மனஉறுதியை ஊக்குவிக்கும் கற்றல் சூழலை ஏற்படுத்துதல் வேண்டும்.
மாணவர்களின் நன்றிக்குரிய தருணங்களை பகிரக்கூடிய கலந்துரையாடல்கள் நடத்த வேண்டும்.
3. ஆக்ஸிடோசின் (Oxytocin) சுரப்பை தூண்டும்  செயல்பாடுகள் :
ஆக்ஸிடோசின் நம்பிக்கை மற்றும் சமூக உணர்வுகளை வளர்க்கும்.
செயற்பாடுகள்:
குழு செயல்பாடுகள், குழுக்களாகப் பிரிந்து ஒரு திட்டம்(Project) உருவாக்குதல் போன்றவை வழங்க வேண்டும்.
மாணவர்களுக்குள் ஒற்றுமையை வளர்க்கும் வகையில் கேள்வி-பதில்(Debate)

நிகழ்வுகள் நடத்துதல் வேண்டும்.
“நண்பனுக்கு உதவல்” நிகழ்ச்சிகள்.
சக மாணவர்களுக்குக் கற்றல் உதவி செய்வதை ஊக்குவித்தல் வேண்டும்.
4. என்டார்பின் (Endorphin) சுரப்பை தூண்டும்  செயல்பாடுகள்:
என்டார்பின் மன மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் ஆகும்.
செயல்பாடுகள் :
மாணவர்களிடம் நகைச்சுவையாக பேச(Humur Club), கதைகள் சொல்ல (Story TellingClub) ,அல்லது குறும்படங்களை உருவாக்க (Short Film Club) போன்ற செயல்கள் மூலம் மகிழ்ச்சி அடைய செய்யலாம்.
கற்றல் வாய்ப்புள்ள இடங்களில் பாடல்களின்(Songs) மூலம் விளக்குதல் வேண்டும்.
சிரிப்பு வாழ்க்கையின் ஒரு பகுதி ஆகும். வகுப்பறையில் நகைச்சுவை உணர்வுகளை தூண்டு வகையில் வகையில் வகுப்பறையை அமைத்தல் வேண்டும்.
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வகுப்புகளை திட்டமிடுதல் வேண்டும்.
5. அட்ரினலின் (Adrenaline) மற்றும் கர்டிசோல் (Cortisol) சமநிலையை ஒழுங்குபடுத்தும்  செயல்பாடுகள் பாடுகள்:
மிதமான அளவில் அட்ரினலின் சுரப்பை, செயலாற்றலுக்கான தயாரிப்பை அதிகரிக்கும்.
செயல்பாடுகள் :
மாணவர்களுக்கு ஆவலுடன் செயலாற்றக்கூடிய சவால்களை வழங்குதல் வேண்டும்(Science Experiment).

வகுப்பறையில் செயல்பாட்டுடன் கல்வி  அமைய வேண்டும்.
சுறுசுறுப்பான போட்டிகளுடன்(Quiz) சீரான விளக்கங்களை அளித்தல் வேண்டும்.
கர்டிசோல் சுரப்பை அதிகரிக்காமல் கவனிக்க:
மன அழுத்தம் அதிகமாக வந்தால் கர்டிசோல் சுரக்கிறது.
எனவே, மாணவர்களுக்குச் சீரான மகிழ்ச்சிகரமாக  வகுப்பறை செயல்பாடுகள் அமைய வேண்டும்.
வெளிப்பாடு :
ஹார்மோன்கள் நம் உடலின் மூளை, பிட்யூட்டரி சுரப்பி மற்றும் அட்ரினல் சுரப்பி போன்ற முக்கிய பகுதிகளில் சுரக்கின்றன. ஒவ்வொரு ஹார்மோனும் நம் உடல் மற்றும் மனநிலையை த சீராக இயக்க உதவுகிறது.
வகுப்பறையில் சிறப்பான சூழலை ஏற்படுத்தும் ஆசிரியர்கள், மாணவர்களின் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தி, ஹார்மோன் சுரப்பை சமநிலையை ஏற்படுத்த உதவலாம்.

மாணவர்கள் மகிழ்ச்சியுடன் செயலாற்றும் சூழலை ஏற்படுத்தும் முயற்சிகளே சிறந்த கல்வி பயணத்துக்கு அடிப்படையாகும். குழந்தைகள் நன்றாக படிப்பதற்கு அவர்களின் மூளையில் சுரக்கும் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வைக்கிறது.
நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts