
இன்று 23.12.24 திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள துறை குடி ஊராட்சியில் பொதுமக்களுக்கு புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அகமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திரு ராபின்சன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார் அதனைத் தொடர்ந்து திருமதி கல்பனா கிராம சுகாதாரசெவிலியர்அவர்கள் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு வழங்கினார் இதில் குறிப்பாக கர்ப்பவாய் புற்றுநோய் மார்பக புற்றுநோய் பற்றிய விளக்க உரை கொடுத்தார்.

இதில் பெண்கள் தங்கள் மார்பகத்தில் உள்ள மாற்றங்களை அறிந்து அதன் நிலையை கண்டறிவதில் தயக்கம் காட்டாமல் உடனடியாக அருகில் உள்ள கிராம சுகாதார செவிலியர் இடம் தகவல் தெரிவித்து அதனை பரிசோதனை செய்ய செய்து தங்கள் மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாப்பதை பற்றி எடுத்துக் கூறினார் அதேபோன்று தற்போது நாம் பயன்படுத்தக்கூடிய புகையிலை ஆன் மசாலா போன்றவை பயன்படுத்தக் கூடாது அரசிலிருந்து பல நல்ல திட்ட உதவிகள் செய்து வருகிறார்கள் அதனை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.













