
நேற்று 22.12.2024 திருச்சியில் தமுஎகச திருச்சி பெண்கள் கிளை சார்பாக நடைபெற்றது.
நிகழ்வில் முனைவர் பாலின் ப்ரீத்தா ஜெப செல்வி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.


முதல் அமர்வில் எழுத்தாளர் கார்த்திகா கவின் குமார் அவர்கள் தலைமை வகித்து தலைமை உரை வழங்கினார்.
முதல் அமர்வில் தமுஎகச-வின் மாநில துணைச் செயலாளர் எழுத்தாளர் ம. மணிமாறன் அவர்கள் சிறுகதையின் நுட்பங்கள் எனும் பொருண்மையில் உரையினை நிகழ்த்தினார்.
இரண்டாம் அமர்வில் ஆசிரியர் செசிலி அவர்கள் தலைமை வகித்து தலைமை உரை வழங்கினார்.
இவ்வமர்வின் உரையாக பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழாய்வுத்துறை பேராசிரியர் செம்பை முருகானந்தம் அவர்கள் சிறுகதையின் கட்டமைப்பு குறித்து உரை நிகழ்த்தினார்.




மூன்றாம் அமர்வில் சுமித்ரா அவர்கள் தலைமை வகித்தார். கவிஞர் நந்தலாலா அவர்கள் படைப்பு மனம் மற்றும் ஏன் எழுத வேண்டும்? எனும் பொருண்மையில் உரை நிகழ்த்தினார்.






நான்காம் அமர்வில் கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் அவர்கள் தலைமை வகித்து, தலைமை உரை வழங்கினார்.
இதில் பங்கேற்பாளர்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்தனர்.
நிகழ்வின் இறுதியாக சந்திரா அவர்கள் நன்றி உரை வழங்கினார்.





இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் வெங்கடேஷ் அவர்கள், மாவட்ட செயலாளர் ரங்கராஜன், மாவட்ட பொருளாளர் ஹரி பாஸ்கர், மாவட்ட உறுப்பினர்கள் இளங்குமரன், மணிமாறன், நாகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் பங்கேற்பு கூடுதலாக இருந்தது.
