
மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் இன்று 23/12/2024 குளிர் காலங்கள் தொடங்கி விட்ட நிலையில் இதனை கருத்தில் கொண்டு நமது அமைப்பின் சார்பில் சாலை ஓரத்தில் இருக்கும் முதியோர்களுக்கு குளிர் தாங்கும் வகையில் ஸ்வெட்டர்& காது அடைப்பு& காலனி மற்றும் மதிய உணவு, தண்ணீர் பாட்டில் ஆகியவை எழில்நகர், அக்பர் சாலை, திருவெறும்பூர் மற்றும் மலைக்கோவில் உள்ள முதியோர்களுக்கு கொடுக்கப்பட்டது.

இதில் நிறுவன தலைவர் திரு T.செல்வராஜ், மாநில துணைத்தலைவர் திருமதி E.ரூபாதேவி, மாநில மகளிர் அணி துணை செயலாளர் திருமதி R.காயத்திரி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி V.ரேகா,தொழிலாளர் அணி செயலாளர் திருமதி R.லதா மற்றும் திரு E.அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சிக்கு பொருளுதவி செய்து எங்களை மக்கள் சேவையில் ஊக்கப்படுத்தும் திருமதி S.ரேணுகா ஸ்ரீராம், திரு உமாபதி இவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் அமைப்பின் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.














