பல மொழிகளை கற்றவராக போர்ப் பயிற்சியை பெற்றவராக விளங்கிய ராணி வேலு நாச்சியார் ஆவுடையார் கோவிலில் நிராயுதபாணியாக பக்தியோடு கைகூப்பி வணங்கிக்கொண்டிருந்த தன் கணவரை ஆங்கிலேய அரசாட்சி வஞ்சகமாக கொன்றநிலையில் தனக்கான சம்பிரதாய கடமைகளை நிறைவேற்றிய பின் குதிரையில் தப்பிச் சென்றார். திண்டுக்கல் விருப்பாச்சி சிற்றரசரான தன் தந்தை போன்ற விருப்பாச்சி கோபால் நாயக்கர் பாதுகாப்பில் தங்கினார். கோபால் நாயக்கர் அவர்கள் அருகாமை சிற்றரசு பாளையங்களுடன் பேசி படைகளை திரட்டினார். மைசூர் மன்னர் ஹைதர் அலி அவர்கள் திண்டுக்கல் கோட்டையில் தங்கிய தை தெரிவித்து அவரிடம் நேரில் பேசி படை உதவி ஆயுத உதவியை கோரிய ஆண் வேடத்தில் மைசூர் மன்னரை சந்தித்து உருது மொழியில் ராஜ தந்திரத்துடன் பேசினார். ஆங்கிலேயே எதிர்ப்பை கொண்ட ஹைதர் அலி அவர்கள் படை வீரர்கள் ஆயுதங்கள் பீரங்கிகளையும் ராணிக்கு வழங்கினார்.

படைகளுடன் சிவகங்கை சென்ற ராணி போர் வியூகம் வகுத்து செயல்பட்டார். அவரது மெய்க்காப்பாளரான குயிலி தன் உடல் முழுவதும் கோவில் விளக்கு எண்ணையில் நனைத்த துணி உடைகளுடன் ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கின் மேல் குதித்து சின்னாபின்னமாக்கி உயிர் துறந்தார். பின்னர் மருது சகோதரர்களுடன் படைகளை சரியாக செலுத்தி ஆங்கிலேயர்களிடம் இருந்து போரிட்டு நாட்டை மீட்டு சிவகங்கை சீமையின் ராணியாகி சாதித்தார்.தான் குதிரையில் தப்பிச்சென்ற போது தான் சென்ற பாதை திசையை கூற மறுத்து ஆங்கிலப் படைகளால் கொல்லப்பட்ட உடையாள் யார் என அறிந்து சிறுமியான உடையாளுக்கு கோவில் கட்டி வணங்கினார்.அவரது ஒளி ஒலி காட்சி நிகழ்ச்சி மெய் சிலிர்க்கிறது. சிவகங்கையில் அரசு நினைவிடம் அமைத்து ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடுகிறது.












