அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்டப் போட்டிக்குத் தேர்வு. கன்னியாகுமரியில் 133 அடி திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதன் வெள்ளி விழாவை முன்னிட்டுத் தமிழக அரசால் மாணவர்களுக்குத் திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி வினா, பேச்சுப்போட்டி ஆகியவை வட்டார அளவில் நடைபெற்றது. அதில் பேச்சுப் போட்டியில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மோ. சஞ்சீவிகுமார் முதலிடமும்,மு.நூருல் பௌஜானா இரண்டாம் இடமும், மு.சு.மகிமா மூன்றாம் இடமும் பெற்று மூவரும் மாவட்டப்போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வரும் டிசம்பர்27ஆம் தேதி கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் மாவட்ட போட்டியில் இவர்கள் பங்கு பெறுவர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த பட்டதாரி ஆசிரியர் ஷகிலா பானுவையும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் பாண்டித்துரை, சதீஷ்குமார், வட்டாரவளமைய மேற்பார்வையாளர்(பொ)தமிழ்ச்செல்வி,தலைமை ஆசிரியர் சாகுல் அமீது ஆகியோர் பாராட்டினர்.












