
அனைவருக்கும் வணக்கம். ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் ஏழு நாள் சிறப்பு முகாம் “தூய்மை பணியில் இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் இன்று 25/12/2024 புதன்கிழமை அன்று சமயபுரத்தில் உள்ள அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் காலை 11 மணிக்கு துவக்க விழா நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாம் சமயபுரத்தினை சுற்றியுள்ள நான்கு கிராமங்களான ச. கண்ணனூர், மருதூர், ஈச்சம்பட்டி மற்றும் பள்ளிவிடை ஆகியவற்றை பராமரிக்கவும், சுத்தம் செய்யவும் மேலும் கிராம மக்களிடையே சுத்தம், சுகாதாரம் போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் தொடங்கப்பட்டது. இச்சிறப்பு முகாமை கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் CA. R. வெங்கடேஷ் அவர்களின் தலைமையின் கீழ் கல்லூரியின் முதல்வர் முனைவர். M. பிச்சைமணி அவர்களின் வழிகாட்டுதல் படி, துணை முதல்வர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட நெறியாளர் முனைவர்.R. கிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார். இச்சிறப்பு முகாமின் மையக் கருத்துக்கள் மற்றும் நோக்கத்தினை எடுத்துரைத்து நான்கு கிராமங்களையும் நன்கு பராமரித்து சுத்தம் செய்யவும் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் அறிவுரை வழங்கினார். இச்சிறப்பு முகாமினை தொடங்கி வைப்பதற்காக பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.P.ராமஜெயம் அவர்கள் பங்குகொண்டு மாணவர்களுக்கு சமுதாயத்தின் மீதான பொறுப்புகளை எடுத்துரைத்து சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தார்.

கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்.V. உபேந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களை வாழ்த்தி அவர்களுக்கான அறிவுரைகளையும், விதிமுறைகளையும் வழங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர். A. அருண் பிரகாஷ் வரவேற்புரை வழங்கினார். மேலும் முனைவர். R. முத்துக்குமார் நன்றி உரை வழங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ஆ. அருண் பிரகாஷ் முனைவர் ரா. முத்துக்குமார் திரு.செ. மணிவேல் திருமதி வி. மலர்கொடி அவர்களின் தலைமையில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
