• Home
  • தமிழ்நாடு
  • நேற்று 27.12.24, வெள்ளிக்கிழமை, சென்னையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை விழிப்புணர்வு 2019 சட்டத்தின்  சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய விழிப்புணர்வினை அனைத்து சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் தன்னார்வ அமைப்பு ஆர்வலர்களுக்கு, கூட்ட அரங்கில் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு

நேற்று 27.12.24, வெள்ளிக்கிழமை, சென்னையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை விழிப்புணர்வு 2019 சட்டத்தின்  சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய விழிப்புணர்வினை அனைத்து சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் தன்னார்வ அமைப்பு ஆர்வலர்களுக்கு, கூட்ட அரங்கில் பயிற்சி அளிக்கப்பட்டது.

Email :106

நேற்று 27.12.2024, வெள்ளிக்கிழமை, சென்னையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை விழிப்புணர்வு 2019 சட்டத்தின்  சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய விழிப்புணர்வினை அனைத்து சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் தன்னார்வ அமைப்பு  ஆர்வலர்களுக்கு, கூட்ட அரங்கில் பயிற்சி அளிக்கப்பட்டது. மதிப்பிற்குரிய இயக்குனர் திரு த. மோகன் இ.ஆ.ப அவர்கள்  தலைமை ஏற்று பயிற்சியினை ஆரம்பித்து உற்சாகப்படுத்தினார்.

திரு நெகேமியா( ஓய்வு  துணை ஆணையர்,) திருமதி விஜய திலகா (இணை ஆணையர்  ஓய்வு) மற்றும் DC,Ac(,1&2) அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.
காலை பயிற்சியில் மதிப்பிற்குரிய திரு. நெகேமியா அவர்கள் புதிய நுகர்வோர் பாதுகாப்பின் சட்ட அம்சங்கள் 2019. ஐ  தெளிவாக விவரித்தார்.
மாலை பயிற்சியில் (மதிய உணவிற்குப் பின்) அன்பிற்குரிய( ஓய்வு துணை ஆணையர்) திருமதி விஜய திலகா அவர்கள், அவர்களுக்கே உரித்தான, முக மலர்சியுடன், புன்னகையுடன் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு, சட்டங்கள் மற்றும் செயல்பாடுகள், சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும் முறை பற்றிய அருமையான கருத்துக்களை பதிவு செய்து அனைவரையும் மகிழ் வித்த இவர்களது பயிற்சி மிகவும் உதவிகரமாக இருந்தது.

வந்திருந்த  அனைத்து நுகர்வோர் பிரதி நிதிகள் உற்சாகமாக காணப்பட்டார்கள். இப்பயிற்சி முக்கியமானதாக கருதப்படுகிறது.
இப்பயிற்சி பெற திரு. கோவிந்தராஜ் & திரு மோகன் இவர்களை திருச்சி மாவட்ட உணவு வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்கள் திரு.உதய குமார் & திரு ஜவஹர் அவர்கள் பரிந்துரை செய்தமைக்கு நன்றிகள் பல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts