• Home
  • தமிழ்நாடு
  • தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், தேசிய முற்போக்குத் திராவிட கழகத் தலைவருமான கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்.
தமிழ்நாடு

தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், தேசிய முற்போக்குத் திராவிட கழகத் தலைவருமான கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்.

Email :125

தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், தேசிய முற்போக்குத் திராவிட கழகத் தலைவருமான கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் இன்று இலால்குடி ரவுண்டானாவில் காங்கிரஸ் பேரியக்கம் மற்றும் இளைஞர் காங்கிரஸ் திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்றது.
கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின்  திருஉருவப்படத்திற்கு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விச்சு (எ )லெனின் பிரசாத் அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் திரு. கலை அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் லால்குடி வட்டாரத் தலைவர் சுப்பிரமணியன் லால்குடி நகரத் தலைவர் மணக்கால் திரு. ஆனந்த் அவர்கள், சிறுபான்மை மாவட்ட தலைவர் திரு. நவ்ஷாத் சாதிக்   அவர்களும் மற்றும் இளைஞர் காங்கிரஸ் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் மருதூர் செல்வம்,திருச்சி வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ராஜ்குமார் அவர்களும்,  அவர்களும், திருமங்கலம் தலைவர் யுவராஜ் அவர்களும், பூவாளுர் நகரத் தலைவர் ஆனந்த் அவர்களும், நகர கமிட்டி ராமு அவர்களும், மற்றும் பொதுமக்கள் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். நிகழ்வினை
இலால்குடி நகர இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி திரு. பாபு ஜெயராஜ் ஒருங்கிணைத்தார்கள்.சிறப்பு செய்தியாளர்,
இலால்குடி,
க.ரெங்கநாதன்.
7540018725

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts