• Home
  • தமிழ்நாடு
  • வகுப்பறையிலிருந்து வீட்டுக்குப் கல்வி பயணம்: சுயக்கற்றல் ஒரு சிறப்பு பார்வை!
தமிழ்நாடு

வகுப்பறையிலிருந்து வீட்டுக்குப் கல்வி பயணம்: சுயக்கற்றல் ஒரு சிறப்பு பார்வை!

Email :307

வகுப்பறையிலிருந்து வீட்டுக்குப் கல்வி பயணம்: சுயக்கற்றல் ஒரு சிறப்பு பார்வை,

By
S.சிவகுமார்
முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,
காஞ்சிபுரம்
செல்: 6383690730

திருமதி செல்வகனி – தலைமை ஆசிரியர்

திருமதி சா.புஸ்பா – இடைநிலையாசிரியர்

ஆர்.சி. தொடக்கப் பள்ளி,
இலங்குளம், நாங்குநேரி வட்டாரம்,
திருநெல்வேலி மாவட்டம்.

நாங்கள் 28.12.2024 அன்று கிராமத்திற்கு சென்றோம். எங்களை கண்டதும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

குழந்தைகளும் பெற்றோர்களும் எங்களை மகிழ்ச்சியாக வரவேற்றனர்

குழந்தைகளையும் பெற்றோர்களையும் சந்தித்து உரையாடினோம். குழந்தைகள் சுயமாக எப்படி படிக்கிறார்கள் என்பதைப் பார்த்தோம். விடுமுறை நாட்களில் படிப்பதை மறந்துவிடாமல் சுயமாக படிப்பதை பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.

குழந்தைகள் படிப்பதன் மூலம் ஏழ்மை ஒரு தடையாக இல்லையென நிரூபித்தனர். அவர்கள் நன்றாக படிப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள், அடுத்த ஆண்டில் மேலும் பல குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்க்க முயற்சிப்பதாக தெரிவித்தனர். பெற்றோர்கள் எங்கள் பள்ளியின் சிறப்புகளை மற்றவர்களுக்கு கூறுவது பெருமையாக இருந்தது.

ஒரு பெற்றோர் பெருமையுடன் கூறினார், “3-4 வயதுடைய குழந்தைகள் எங்களைக் கடந்து சென்றார்கள்  இவர்கள் வருங்கால ஆர்.சி. பள்ளி மாணவர்கள் தான்” என்று அவர்கள் கூறும்போது நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். இது எங்கள் மாணவர்களுக்காக இன்னும் நல்ல பயிற்சிகளை வழங்க எங்களை உற்சாகமாக்கியது.

திருமதி கவிதா – சிந்துஜா மற்றும் சித்தார்த்தின் பெற்றோர்:
“டீச்சர், என் மகன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தைரியமாகவும் சரளமாகவும் வாசிக்கிறார். என் மகள் எப்போதும் தயங்கிக் கொண்டிருப்பாள். ஆனால் இப்போது, காலை அசெம்ப்ளியை ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை நேர்த்தியாக நடத்துவார் என சொல்லும் போது, என் மகளின் இந்த மாற்றத்திற்குக் காரணம் உங்கள் பள்ளியும் சுயக்கற்றல் மையமும்தான்.

உங்களுக்கும் பள்ளிக்கூடத்திற்கும் மனமார்ந்த நன்றி டீச்சர்!”
இதைச் சொல்லி பெற்றோர் மகிழ்ச்சியுடன் எங்களுக்கு பழச்சாறு கொடுத்தனர்.

திருமதி கார்த்திகா – முத்து ராஜேஷின் பெற்றோர்:
“என் மகனுக்கு எந்தப் பாடத்தை படிக்கச் சொன்னாலும் உடனே படித்து விடுவார். நீங்கள் பரிசாகக் கொடுத்த செஸ் போர்டு என் இரு மகன்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏற்கெனவே எங்களிடம் கேரம் போர்டு உள்ளது. இப்போது, அருகிலுள்ள கடையிலிருந்து ருபிக் க்யூப் வாங்கி கொடுக்கிறேன். விடுமுறை நாட்களிலும் குழந்தைகள் புதிதாக கற்றுக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் இந்த விடுமுறையில் எங்கும் செல்லவில்லை. பசங்களின் படிப்பே முக்கியம். அவர்களின் ஆர்வத்தை தூண்டி வளர்க்க எங்கள் வீடு மிகச்சரியான இடம் டீச்சர். மே மாத விடுமுறையில் ஊருக்குச் செல்வோம் என்று கூறி மோர் கொடுத்து எங்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்தார்கள்.”

திருமதி சூர்யா – பிரியதர்ஷினி மற்றும் சூர்ய பிரகாஷின் பெற்றோர்:
“என்னுடைய குழந்தைகள் ஆங்கிலத்தை நன்றாக வாசிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் எங்கள் டீச்சர் சொல்லிக்கொடுத்தது தான். ‘நாம்  பள்ளி வளாகத்தையும் வகுப்பறையையும் சுத்தமாக வைத்திருக்கிறோமோ, அதேபோல் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதே நம் கடமை’ என்று நீங்கள் கூறியதையே அவர்கள் நினைவுபடுத்துவார்கள் என்று பெற்றோர்கள் கூறினார்கள்

இந்த நல்ல பழக்கத்தை குழந்தைகள் தாமாகவே செய்வது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது.

சுயக் கற்றல் திறன்:
குழந்தைகள் விடுமுறை நாட்களிலும் சுயமாகப் படிக்கத் தொடங்கியதால் அவர்களின் தன்னம்பிக்கையும் அறிவும் வளர்ச்சி அடைகிறது.

கற்றலில் சமூக பங்கு:
பெற்றோர்கள் பள்ளியின் சிறப்புகளை மற்றவர்களிடம் பகிர்ந்து சமூகத்தில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.

கற்றல் ஆர்வம்:
புத்திசாலித்தனம் வளர்க்கும் விளையாட்டுப் பொருள்கள் (செஸ் போர்டு, ருபிக் க்யூப்) மூலம் குழந்தைகள் கற்றலை சுவாரசியமாக்குகின்றனர்.

மொழி திறன்:
குழந்தைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக வாசிக்கவும் பேசவும் தைரியம் பெறுகிறார்கள்.

சுத்தமான சுற்றுப்புறம்:
வகுப்பறையில் கற்ற சுத்தம் பின்பற்றும் பழக்கத்தை வீட்டிலும் கடைப்பிடிக்கின்றனர், இது சுற்றுச்சூழலின் மேம்பாட்டுக்கும் உதவுகிறது.

தொடர்ந்த கல்வி:
குழந்தைகள் ஏழ்மை அல்லது பிற பொருளாதார பிரச்சனைகளைக் கடந்து தொடர்ந்து கல்வியில் கவனம் செலுத்துகிறார்கள்.

முன்னோடி குழந்தைகள்:
மற்ற குழந்தைகளுக்கு முன்மாதிரியான பங்கு வகிக்கும் இந்த மாணவர்கள் கல்வியின் மூலம் கிராம வளர்ச்சிக்கான அடிப்படையாக இருப்பது பெருமைமிக்கது.

இந்த கற்றல் பயணத்தில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, பெற்றோர்களின் ஆதரவு, மற்றும் குழந்தைகளின் விடாமுயற்சியும் சேர்ந்து ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குகிறது.
நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts