

கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழாவினை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் இன்று 29.12.2024 வாசகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு “திருக்குறள் தொடர்பான வினாக்களில் இருந்து வினாடி – வினா” போட்டி நடைபெற்றது.
துவாக்குடி அரசினர் கலைக்கல்லூரி தமிழ் ஆய்வுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் பகவத்கீதா நெறியாளராக செயல்பட்டார்.


82 வாசகர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் சோமரசம்பேட்டை செ. பிரியதர்ஷினி முதல் இடத்தையும், உறையூர் ந. ஹுமெரா பர்லின் இரண்டாம் இடத்தையும், எடத்தெரு மா. பிரியதர்ஷினி மற்றும் முசிறி த. மூர்த்தி ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியினை வாசகர் வட்டத் தலைவர் வீ. கோவிந்தசாமி துவக்கி வைத்தார். துணைத் தலைவர் கி. நன்மாறன், வாசகர் வட்ட ஆலோசகர் முனைவர் செ. அருணாச்சலம் உள்ளிட்ட வாசகர் வட்ட நிர்வாகிகள், நூலகர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.



நிறைவில் மாவட்ட மைய முதல் நிலை நூலகர் சு. தனலெட்சுமி நன்றி கூறினார்.
இதனைத் தொடர்ந்து 30.12.2024 திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு “நான் ரசித்த வள்ளுவம்” என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா உரையாற்றும் கருத்தரங்கமும், 31.12.2024 அன்று “தீதின்றி வந்த பொருள்” என்ற தலைப்பில் திருக்குறள் சு. முருகானந்தம் மற்றும் “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்ற தலைப்பில் முனைவர் க. பாலின் ப்ரீத்தா ஜெப செல்வி ஆகியோர் உரையாற்றும் கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சு.தனலெட்சுமி,
முதல் நிலை நூலகர்,
மாவட்ட மைய நூலகம்,
திருச்சிராப்பள்ளி.
அலைபேசி: 93447 54036














