

புரட்சி பாவேந்தர் பேரவை, திருச்சி, திங்கள் பொழிவு, திருச்சி தமிழ்ச் சங்கத்தின் குளிர்மை அரங்கில் இன்று 29.12.2024 மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் மொழி வணக்கம் தென்மொழிப் பண்ணன், ஈகவரசன் பாடல்கள் பாடினார். முனைவர் சு. செயலாபதி வரவேற்புரை ஆற்றினார்.

திருச்சி தூய வளனார் கல்லூரி, இளம் அறிவியல் – இயற்பியல் துறை மூன்றாம் ஆண்டு, செல்வன் சுஜாதா சஞ்சய் குமார் “பாவேந்தரின் கல்விச் சிந்தனைகள்” என்ற தலைப்பில் உரையாடினார்.

முனைவர் தி. நெடுஞ்செழியன், “தந்தை பெரியாரும் பாவேந்தரும்” என்ற தலைப்பில் உரையாடினார். திரு. குறல்மொழி அவர்கள் நினைவுரை ஆற்றினார். தமிழ்க்காவிரி தமிழகன், நன்றி உரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்ச் சான்றோர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், பல அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
