

நேற்று 25.01.2025 சனிக்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் சிங்கப்பூர் கவிஞர் தியாக. இரமேஷ் அவர்களின் மனமது செம்மையானால் கவிதை நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

திண்டுக்கல் மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் பால பாரதி அவர்கள் நூலினை வெளியிட , சிலை தடுப்புத் துறை காவல் துறை அதிகாரி சிவக்குமார் ஐ.பி.எஸ் அவர்கள் முதல் படியினை பெற்றுக்கொண்டார்.கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்கள் நிகழ்ச்சியில் தலைமை உரை வழங்கினார்.
இலக்கியச் சிம்மம் பாபுசாசிதரன் அவர்கள் நூல் விமர்சனம் செய்தார்.
கவிஞர் மன்னர்மன்னன் அவர்கள்,கவிஞர் கார்த்திகா கவின் குமார், கவிஞர் தமிழியலன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கவிஞர் முயற்சி முருகேசன், கவிஞர் மாணிக்க வாசகம், பாவலர் சீனி பழனி, செஞ்சி தமிழினியன், கவிஞர் அமுதா பாரதி ஆகிய இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஞாலம் பதிப்பக நிறுவுனர் பாவலர் ஞால ரவிச்சந்திரன் அவர்கள் நிகழ்ச்சியினை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
மனமது செம்மையானால் நூலாசிரியர் கவிஞர் தியாக ரமேஷ் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
இந்நிகழ்வில் நூற்றிற்கும் மேற்பட்ட இலக்கிய ஆளுமைகள், நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.














