தமிழ்நாடு

அறிவு மங்கை ஒருவரை
அறிமுகம் செய்கிறேன்!

Email :139

அறிவு மங்கை ஒருவரை
அறிமுகம் செய்கிறேன்!

இதுவரை
ஆங்கிலத்திலிருந்து
100 உலக நூல்களைத்
தமிழுக்கு மொழிபெயர்த்த
தகைசான்ற பெண்

யுவால் நோவா ஹராரியின்
‘சேப்பியன்ஸ்’
இவர் மொழிபெயர்ப்புதான்;
ஸ்டீபன் ஹாக்கிங்ஸின்
‘காலத்தின் மிகச்
சுருக்கமான வரலாறு’
இவர் மூளைக்குப் பிறந்த
குழந்தைதான்

பாலோ கொயலோ,
ஆனந்த் நீலகண்டன்,
ஸ்பென்சர் ஜான்சன்,
கேரி சேப்மேன் முதலிய
உலகப் படைப்பாளர்களைத்
தமிழ்பேசவைத்தவர் இவர்தான்

ஆங்கிலத்திலிருந்து
100நூல்களைத் தமிழில்
மொழிபெயர்த்திருக்கும் இவர்
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு
மொழிபெயர்த்த ஒரே நூல்
‘கள்ளிக்காட்டு இதிகாசம்’

‘Oxford University Press’
அதை விரைவில்
வெளியிடவிருக்கிறது

வெளிநாடுகளில் வாழ்ந்து
இன்று
மும்பையில் குடியிருக்கும்
தென்காசித் தமிழச்சி இவர்

பெருங்கலைஞர்
அவ்வை சண்முகத்தின்
குடும்பவழிப் பெயர்த்தி

மொழிபெயர்ப்பாளர்
குமாரசாமியின் மனைவி

அறிவுலகம்
கொண்டாட வேண்டிய
கொள்ளை அறிவாளி இவர்

மொழிபெயர்ப்புக் கலை
எந்திரங்களின் கைகளுக்கு
இடம்மாறப் போகிறது

எந்திரங்களின் ஈரமற்ற
மொழிபெயர்ப்புகளுக்கு
மத்தியில்
இதயமுள்ள
மொழிபெயர்ப்புகளுக்காகப் பேசப்படுவார்
நாகலட்சுமி சண்முகம்.

-வைரமுத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts