“பணி நிறைவு”
மாவட்ட நூலகர்
“அ.பொ.சிவகுமார்”
சிவகுமாரின் வாழ்வு அர்த்தமுள்ள ஒன்று.
புத்தகச் சுவறுக்குள் முடங்கிப் போகும் நூலகர் வாழ்வை
சமூக வீதிக்கு அழைத்துவந்ததை அவரின்
வாழ்வின் பங்களிப்பாக நான்
உணர்கிறேன்.
அவரின் பணிக்காலத்தில்
பொது நூலகத்துறைக்கு
கிடைத்த முக்கியத்துவம்
அவரின் நல் வாய்ப்பு.
எந்த ஊரிலும் நல்ல மனம் கொண்ட ‘இதய மனிதர்கள்’
இருக்கத்தான் செய்வார்கள்.
அவர்களை “நல்ல நோக்க நூல்” கொண்டு இணைத்து
எளிய மனிதர்களோடு அவர்களைப் பிணைத்ததில் அவரின் மனிதம் நிறைந்த
அறிவு வெளிப்பட்டதாகவே நான் உணர்கிறேன்.
அவரின் நூலக வாழ்வு எழுததக்கது என்பது என் துணிபு. எழுதட்டும்.
ஓய்வு வாழ்வை மிச்சம் பிடிக்காமல் இஷ்டம்போல்
செலவு செய்யட்டும்.
சமூகம் பயன்படும்.
அவரின் இணையருக்கும்
குழந்தைகள் மற்றும் பிரியமான
பேரப்பிள்ளைக்கும் நம் அன்பான வாழ்த்துக்கள்.
“மொத்த வாழ்வின் சாரம்- நல்ல
நினைவுகளே..” என்பது என்
பொதுவான கருத்து.
வாழ்க்கை முழுதும் நல்ல அனுபவங்கள் தொடரந்துவர
வாழ்த்துவோம்.
-நந்தலாலா
31-01-2025.













