தமிழ்நாடு

“பணி நிறைவு மடல்”

Email :231

“பணி நிறைவு மடல்”

அறம் போற்றும் ஆற்றல் மிக்கவர்…
அறிவினால் அன்பினையும் அன்பினால் அறிவினையும் கடத்தும் அறிவன்புக் கடத்தி…
நட்பை உறவாகக் கொண்டாடும்  பண்பாளர்…
அனைவரையும் அரவணைக்கும் தாயுமானவர்…
ஊட்டியிலிருந்து மலைக்கோட்டை வந்தடைந்த அறிவுத் தென்றல்…
நூலகம் என்ன செய்யும் – ஆம்..
எல்லாம் செய்யும் என்ற சொல்லிற்கு உருவம் கொடுத்த ஆளுமை நிறைந்தவர்…
சிறார் இளையோர் மூத்தோரன மூன்று தலைமுறைகளின் கலங்கரை விளக்கம்…
இளைஞர்களை அரசுப்பணியில் அமர்த்தி அழகு பார்த்த நேர்மையாளர்…
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திய மனித நேயர்…
அவரவர் திறமைகளுக்குக் களம் அமைத்துத் தரும் சமூகச் சிந்தனையாளர்…
மனச்சமநிலையால் நட்புறவுகளை சமன்செய்யும் பேரறிவாளர்…
பதவியைக் கடந்து அன்பால் செயலால் மனிதத்தால் கொண்டாடப்படும் பேரன்புக்காரர்…
எங்கள் அன்பிற்கினிய திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலக அலுவலர் திரு அ. பொ. சிவக்குமார் சார் அவர்களைப் போற்றி மகிழ்கின்றோம்.

(உங்கள் இடத்தில், உங்களைத் தவிர வேறு யாரையும் எங்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
வருத்தமாக இருக்கிறது சார்).

  உங்கள் அன்புசூழ் குடும்பத்துடன் நீங்கள் நீடூழி வாழ்க…

பேரன்புடன்
கார்த்திகா கவின் குமார்
31.01.2025.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts